12 வருஷம் முன்னாடி மாயமான மகன்.. இறந்து போயிருப்பான்னு நெனச்ச தாய்க்கு.. இத்தனை நாள் கழிச்சு வந்த போன் கால்!!
முகப்பு > செய்திகள் > உலகம்12 ஆண்டுகளுக்கு முன் தனது மகன் மாயமான நிலையில், தற்போது இது பற்றி தெரிய வந்த தகவல், தாய் ஒருவரை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
Also Read | முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனி செஞ்ச சம்பவம்.. 15 வருசமா தொட முடியாத ரெக்கார்டு.. மிரண்டு போன ரசிகர்கள்!!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ என்னும் பகுதியை சேர்ந்தவர் Joyce Curtis. இவரது மகன் பெயர் நிக்கோலஸ். இவர் கடந்த 2000 ங்களில் தனது வேலைக்கு போன இடத்தில் திடீரென மாயம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, மகனை காணாமல் தவித்து வந்த ஜாய்ஸ், அவரது கணவருடன் சேர்ந்து புகார் ஒன்றையும் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். இது,தொடர்பாக, போலீசாரும் நிக்கோலஸை பல இடங்களில் தேடியும் வந்துள்ளனர். அப்போது கடந்த 2010 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிக்கோலஸ் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், உடனடியாக அங்கே சென்று ஜாய்ஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோர் பார்த்துள்ளனர்.
ஆனால், அதற்குள் நிக்கோலஸ் மீண்டும் மாயமானதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர், ஆண்டுகள் பல கடந்தும் மகன் குறித்தும் தகவல் எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் இருவரும் மிகுந்த வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு மகன் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். இதனிடையே ஜாய்ஸின் கணவரும் கடந்த ஜூலை மாதம் இறந்து போனதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மகன் மற்றும் கணவர் ஆகிய இருவரும் அருகே இல்லாமல் போனது பெரிய அளவில் அவரை பாதித்துள்ளது.
அப்படி ஒரு சூழலில் தான், கடந்த ஒரு சில தினங்கள் முன்பு பிரிட்டன் தூதரகத்தில் இருந்து ஜாய்ஸ்க்கு ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, மகன் நிக்கோலஸ் பிரான்சில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தான். காணாமல் போன மகன் இறந்தே போனதாக கருதி வந்த ஜாய்ஸ்க்கு இந்த செய்தி, பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதன் பின்னர், தொலைபேசியில் மகனிடமும் பேசியுள்ள ஜாய்ஸ், வீட்டுக்கு வருவாயா என கேட்க, நிக்கோலஸும் வருவதாக உறுதி அளித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மகன் மீண்டும் இணைய உள்ள விஷயம், தாயார் ஜாய்ஸை மிகுந்த உற்சாகசத்தில் ஆழ்த்தி உள்ளது.
Also Read | 18 மணி நேரமா.. காருக்குள் இருந்த இளம்பெண்?.. மகள் அனுப்பிய திகிலூட்டும் வீடியோவை பார்த்து கதிகலங்கிய தாய்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ராணுவத்துக்கு மகனை வரவேற்ற மூத்த வீரர்.. நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ..!
- இறந்த தந்தைக்கு பால் ஊற்றி.. சாமி ஆடிய மகன்.. திடீர்ன்னு எழுந்து உட்கார்ந்த தந்தை... பதறிய உறவினர்கள்!! பரபரப்பு சம்பவம்.
- "அன்புள்ள அப்பா அப்பா..".. மகனை பைக்கில் அழைத்துப் போகும் போது தந்தை செய்த செயல்.! கலங்க வைத்த வீடியோ!!..
- இரவு, பகல் பாராமல் பொது வெளியில் நோட்டமிட்ட தாய், மகன் .. வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்த உடல் பாகங்கள்?.. நாட்டை உலுக்கிய மற்றுமொரு கொடூரம்!!
- "புருஷன காணோம்ங்க ஐயா".. விசாரணையில் இறங்கிய போலீஸ்.. கடைசில சிக்கிய அம்மாவும், மகனும்".. நடுங்க வைத்த பயங்கரம்!!
- "செத்து போய்ட்டான்னு தான் நெனச்சேன்".. மகன் பத்தி 17 வருஷம் கழிச்சு பெண்ணுக்கு தெரிஞ்ச உண்மை!!
- இளம் மகனை விபத்தில் பறிகொடுத்த அதிர்ச்சியில் பெற்றோர் எடுத்த முடிவு.! கோவையை உலுக்கிய சோகம்..
- "எங்கப்பா கஷ்டப்பட கூடாது சார்".. அப்பாவுக்கு உதவி செய்ய போராடும் மகன்.. IAS அதிகாரி பகிர்ந்த நெகிழவைக்கும் வீடியோ..!
- படிக்கலைன்னு திட்டிய அப்பா.. வீட்டைவிட்டு ஓடிப்போன மகன்.. ஒன்றரை வருஷம் கழிச்சு நடந்த அதிசயம்.. வாழ்க்கையை மாற்றிய ஆதார்கார்டு..!
- "தனியா இருந்த அப்பா எங்க காணாம போய்ட்டாரு?".. தேடிய மகன்.. தோட்டத்துக்கு நடுவே.. "ஒண்ணர அடி குழிக்குள்ள".. குலை நடுங்க வைத்த பயங்கரம்!!