'பழைய 'லேப்டாப்'பை குப்பையில் போட்ட அம்மாவினால்...' ரூ. 3000 கோடி பணத்தை இழந்த மகன்...! - அப்படி உள்ள 'என்ன' இருந்துச்சு...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மகனின் பழைய லேப்டாப்பை அம்மா குப்பையில் போட்டதினால் ரூ.3000 கோடியை இளைஞர் ஒருவர் இழந்துள்ளார்.

Advertising
>
Advertising

'ரெட்டிட்' (Reddit) என்ற சமூகவலைத்தளத்தில் பெயர் வெளியிட விரும்பாத இளைஞர் ஒருவர் தன்னுடைய கவலையை கூறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தன் கதையை குறித்து கூறிய அந்த இளைஞர், 'என் அம்மாவின் கவன குறைவால் சுமார் ரூ.3000 கோடியை நான் இப்போது இழந்துள்ளேன். 2010ஆம் ஆண்டு நான் கல்லூரியில் படிக்கும் போது 10 ஆயிரம் பிட்காயின்களை 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்.

அப்போது கிரிப்டோகரன்சி அவ்வளவு பிரபலம் இல்லை. ஏதோ ஒரு ஆசையில் வாங்கி, அதன் முழுவிவரங்களையும் என் லேப்டாப்பில் வைத்திருந்தேன். அதன்பின் அந்த கிரிப்டோகரன்சி குறித்து நான் மறந்து நான் வேலைக்கு செல்ல ஆரம்பிட்டேன்.

இப்போது கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மார்க்கெட் பற்றி கேள்விப்பட்டதும் நான் வாங்கிய பிட்காயின் ஞாபகம் வந்தது. அதற்குப்பின் வீட்டிற்கு சென்று 10 ஆயிரம் பிட்காயின் விவரங்களை வைத்த, லேப்டாப்பை தேட துவங்கினேன். ஆனால், லேப்டாப்பை நீண்ட நேரம் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.

எனது அம்மாவிடம் என் லேப்டாப் பற்றி கேட்டபோது அவர் லேப்டாப்பை குப்பையில் வீசி விட்டதாக கூறினார். ஒரு நிமிடம் எனக்கு இருதயமே நின்றுவிட்டது. என்னை கேட்காமல் என் லேப்டாப்பை அவர் வீசியுள்ளார்.

நான் வைத்திருந்த 10 ஆயிரம் பிட்காயின்களின் இன்றைய மதிப்பு  300 மில்லியன் பவுண்டுகள் அதாவது சுமார் 3000 கோடியாக மாறியிருந்தது. என்னால் இந்த இழப்பை ஜீரணிக்க முடியவில்லை.

மிகவும் மன உளைச்சலில் இருந்தேன். இப்போது மன உளைச்சலில் இருந்து வெளியே வந்தாலும், இன்றும் கூட இவ்வளவு பெரிய தொகை தன் கையை விட்டுப் போய்விட்டதே என தோன்றும். நான் விளையாட்டாக வாங்கிய பிட்காயின் எனக்கு கிடைக்காமலே போய்விட்டது' என வருத்தமாக கூறியுள்ளார்.

RS 3, 000 CRORE, குப்பை, LAPTOP, பிட்காயின், TRASH, லேப்டாப், அம்மா, மகன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்