'என்னப்பா நடக்குது இங்க’... ‘எல்லாமே முன்னுக்குப் பின் முரணா இருக்கு’... ‘கொரோனா பரிசோதனை குறித்து’... ‘கேள்வி எழுப்பிய பில்லியனர்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பின் முடிவு முன்னுக்குப்பின் முரணாக வந்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கு வைரஸ் பாதிப்பை தடுக்க கொரோனா பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு, தடுப்பு மருத்து பரிசோதனைகளையும் உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனாவை உறுதிசெய்ய பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகள் மீதான நம்பகத்தன்மை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பல நாடுகளில் வைரஸ் பரிசோதனையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரே நாளில் மேற்கொண்ட 4 கொரோனா பரிசோதனையில் குழப்பமான முடிவுகள் வெளிவந்துள்ளதாக பிரபல டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இது மிகவும் போலியாக உள்ளது.

இன்று நான்கு முறை கொரோனா பரிசோதனை செய்தேன். இரண்டு சோதனைகள் பாஸிடிவ் வந்தன. இரண்டு பரிசோதனைகள் நெகடிவ் என வந்தன. அதே விரைவான ஆன்டிஜென் சோதனை இயந்திரம், அதே சோதனை, அதே செவிலியர்' என பதிவிட்டுள்ளார். தனக்கு சளி பாதிப்பு மட்டும் இருப்பதாக தெரிவித்துள்ள எலான் மஸ்க் தற்போது பிசிஆர் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, டெஸ்லா (Tesla) இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் (Elon Musk) உலகின் ஏழாவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்