'கொரோனாவை விட இது பயங்கரம்'... 'விவசாயிகளின் ஈரக்கொலையை நடுங்க வைத்த சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகையே தற்போது எது அச்சுறுத்தி கொண்டிருக்கிறது என கேட்டால், அனைவரிடம் இருந்து வரும் பதில் கொரோனா வைரஸ். ஆனால் கொரோனா எல்லாம் எங்களுக்கு தெரியாது, அதை விட மோசமான ஒன்று எங்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக மாற்றி கொண்டிருக்கிறது என கதறுகிறார்கள், கிழக்கு ஆப்பிரிக்க விவசாயிகள்.
கிழக்கு ஆப்ரிக்க நாடுககளுக்கு பெரும் சோதனையாக இருப்பது உணவு பஞ்சம். இந்த கொடுமை போதாது என்று கடந்த இரண்டு ஆண்டு காலமாக படையெடுத்து வரும் வெட்டுக் கிளிகளால் மேலும் அவதிப்பட்டு வருகிறார்கள் அந்த நாட்டின் விவசாயிகள். கென்யாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெட்டுக் கிளிகள் படையெடுத்து உள்ளன. லோகஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த வெட்டுக் கிளிகள், விளைப்பயிர்களை அசுரத்தனமாக வேட்டையாடுகின்றன.
கென்யாவில் மட்டும் 200 பில்லியன் வெட்டுக் கிளிகள் படையெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, 2019-ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் முன்பில்லாத அளவுக்கு பெய்த கனமழை தான். மேலும் எத்தியோப்பியா, சோமாலியாவில் மழை வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு வெட்டுக் கிளிகள் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே அதிகரித்து வரும் வெட்டுக் கிளிகளை மருந்து தெளித்து அளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 71 கோடியே 32 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு கென்யாவில் 5 சிறிய ரக விமானங்கள் மூலம் மருந்து தெளிக்கப்பட்டு வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே வரும் மார்ச் மாதம் மீண்டும் கனமழை தொடங்கும் என்பதால் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு தலைவலியாக மாறும் என அவர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
மற்ற செய்திகள்