“கொரோனா உள்ளவங்கள கண்டு புடிக்குறதுலயே ஆயுசு போகுது!”.. புதிய யோசனையுடன் களத்தில் குதித்த நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்றுக்குண்டானவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகள் இருக்கும், நோய் தோற்றால் பாதிக்கப்படாதவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுக்குமான வித்தியாசங்களை ராணுவ மோப்ப நாய்கள் மூலம் கண்டறிந்து அதை வைத்துக்கொண்டு நோய் தொற்றிய மாதிரிகளை கண்டறிந்து நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று ஜெர்மானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஜெர்மனியின் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி ஜெர்மனி ராணுவத்தில் உள்ள எட்டு மோப்ப நாய்களுக்கும் ஒரு வாரம் மட்டுமே, கொரோனா தொற்றுள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று அல்லாதவர்களிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளைக் கண்டுபிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்த மோப்ப நாய்கள் நேர்த்தியாக கொரோனா தொற்றுள்ள மாதிரிகளை கண்டுபிடித்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இப்படி ஆயிரம் மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை செய்ததில், மோப்ப நாய்களை பயன்படுத்தி கொரோனா தொற்றுள்ளவர்களை அடையாளம் காணலாம் என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஆய்வு இன்னும் தொடக்க கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்