ஐயோ, விமானத்த கீழ இறக்குங்க.. கத்தி அலறிய பயணிகள்.. சீட்டுக்கு மேல பார்த்தப்போ.. நடுவானில் பரபரப்பு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மலேசியா: வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகளுடன் பாம்பும் பறந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

இயற்கையை மனிதன் கைவசப்படுத்துவதன் மூலம் ஏராளம் தொந்தரவுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வன விலங்குகள், ஊர்வன போன்றவை மனிதர்கள் நடமாடும் பகுதிக்கு வருவது தொடர்கதையாகி வருகிறது. மனிதர்கள் புழங்கும், வீடுகள், வாகனங்கள் என வந்துக் கொண்டிருந்த பாம்பு தற்போது பல அடி மேலே சென்று வானில் பறக்கும் விமானத்தில் வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இருக்கைக்கு மேல் இருந்த பாம்பு:

நேற்று ஏர் ஆசியா விமானம் ஒன்று மலேசியாவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கோலாலம்பூரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானம் புறப்பட்ட சில மணிநேரம் கழித்து ஒரு பயணி அமர்ந்திருந்த இருக்கைக்கு மேல் உள்ள பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது.

கத்தி கூச்சலிட்ட பயணிகள்:

இதனை பார்த்த அங்கிருந்த விமானத்தில் பறந்த மற்ற பயணிகள் பயந்து ஆரவாரமிட்டு கத்தியுள்ளனர். அதையடுத்து உடனடியாக ஏர் ஆசியா கூச்சிங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

பாதுகாப்பில் சரிவர கவனம் செலுத்தவில்லை:

இந்த சம்பவம் காரணமாக அர் ஆசியா பயணிகளின் பாதுகாப்பில் சரிவர கவனம் செலுத்தவில்லை என பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மேலும், இது குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லியாங் டைன் லிங் பேசும்போது, 'பயணிகளின் பாதுகாப்பைப் கருதி சாபாவின் தவாவ் நகருக்கு செல்ல வேண்டிய விமானம் கூச்சிங்குக்கு திசை திருப்பட்டது. இது எதேச்சையாக நடந்த ஒரு சம்பவம். இனி இதுபோன்று ஒரு போதும் நடக்காது' என கூறியுள்ளார்.

அழையா விருந்தாளி:

மேலும் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், கூடிய விரைவில் விமானம் தாவாவிற்குப் புறப்படும் என்றும் கூறியுள்ளார். விமானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று பயணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SNAKE, AIR ASIA, FLIGHT, MALAYSIA, பாம்பு, ஏர் ஆசியா, மலேசியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்