ஒரு பாம்பு இன்னொரு பாம்பை.. சாப்பிட்டு பாத்து இருக்கீங்களா?.. வீடியோ உள்ளே!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக பாம்புகள் உணவாக சிறுசிறு விலங்குகள், பறவைகளை சாப்பிடும் என கேள்விப்பட்டு இருப்போம். மலைப்பாம்புகள் ஆடு, கோழி, மனிதன், ஆடு என எது கிடைத்தாலும் வாரி சுருட்டி விழுங்கி விடும். ஆனால் ஒரு பாம்பே இன்னொரு பாம்பை சாப்பிட்டு பாத்து இருக்கீங்களா?

இதுவரைக்கும் பார்த்தது இல்லனா இந்த வீடியோவை பாருங்க. நெஜமாவே ஒரு பாம்பு இன்னொரு பாம்பை கடிச்சு சாப்பிடுது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊழியரான இவாஞ்சலின் கம்மிங்ஸ், கெயின்ஸ்வில் என்ற பகுதியில் பாம்பு, இன்னொரு பாம்பைச் சாப்பிடும் சம்பவத்தைப் பார்த்து இருக்கிறார். உடனே அதை அவர் வீடியோவாக எடுத்து தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில், ஈஸ்டர்ன் கோரல் பாம்பு கிளையிலிருந்து தொங்கும் ரேட் பாம்பை கடித்து சாப்பிடுகிறது. அந்த சமயத்தில் அங்கு வரும் குளவி ஒன்று, கோரல் பாம்பை சரமாரியாக கொத்துகிறது. உடலில் உள்ள ரோமங்களை சிலிர்க்க செய்யும் இந்த வீடியோவை இதுவரை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வீடியோவை பகிர்ந்த இவாஞ்சலினை ஒருசிலர் திட்டினாலும், பலர் இந்த அரிய நிகழ்வை எடுத்ததற்காக இவாஞ்சலினை பாராட்டி உள்ளனர்.

 

SNAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்