பாத்ரூமில் உட்கார்ந்து செல்போனில் வீடியோ கேம்.. எதிர்பார்க்காத நேரத்தில் இளைஞருக்கு காத்திருந்த ஷாக்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கழிவறையில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மலேசியா நாட்டை சேர்ந்தவர் இளைஞர் சப்ரி தசாலி (28 வயது). இவர் தினமும் கழிவறையை பயன்படுத்தும்போது தனது செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் கடந்த மார்ச் 28-ம் தேதி சப்ரி தசாலி வீடியோ கேம் விளையாடும்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கழிவறையில் அமர்ந்து ஆர்வமாக செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த போது மலைப்பாம்பு ஒன்று சப்ரி தசாலியின் பின் பக்கம் கடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாம்பை பிடித்துக்கொண்டே அலறியடித்து கழிவறையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனை அடுத்து வேகமாக பாம்பை பிடித்து இழுத்து கீழே வீசியுள்ளார். பின்னர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

மலைப்பாம்பு விஷத்தன்மை கொண்டது இல்லை என்பது தெரிந்த பின்பு சப்ரி தசாலி நிம்மதியடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற சப்ரி தசாலிக்கு டெட்டனஸ் எதிர்ப்பு ஊசி போடப்பட்டுள்ளது. தனது குடும்பம் 40 வருடங்களாக வசித்து வரும் இந்த வீட்டில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சப்ரி தசாலி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘இந்த சம்பவம் என் வாழ்வின் ஒரு துரதிர்ஷ்டவசமான தருணம். இது மார்ச் மாதம் நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியிருந்தாலும், அந்த அதிர்ச்சியில் இருந்து இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன். சுமார் இரண்டு வாரங்கள் என் வீட்டில் கழிப்பறையை நான் பயன்படுத்தவே இல்லை. அதற்கு பதிலாக உள்ளூர் மசூதியின் கழிப்பறையை தான் பயன்படுத்தினேன்’ என சப்ரி தசாலி குறிப்பிட்டுள்ளார்.

SNAKEBITE, TOILET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்