13,500 அடி உயரத்துல பறந்தபோது தடுமாறிய பாராசூட்.. கீழே விழுந்தும் உயிர்பிழைச்ச பெண்..உண்மையாவே இது மெடிக்கல் மிராக்கிள் தான்..
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 13,500 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
ஸ்கை டைவிங்
சிலருக்கு உயரமான இடம் என்றாலே அச்சம் தரும். ஆனால், ஒரு சிலருக்கு எவெரெஸ்ட் சிகரமாகவே இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என இருக்கும். அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜோர்டான் ஹாட்மேக்கர். 35 வயதான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஸ்கை டைவிங் எனப்படும் சாகசத்தில் ஈடுபட்டுவருகிறார். சிறுவயது முதலே ஸ்கை டைவிங் செய்யவேண்டும் என விரும்பினாராம் இவர்.
13,500 அடி உயரம்
அமெரிக்காவின் விர்ஜீனியா பகுதியில் உள்ள Suffolk எனும் இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்கை டைவிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார் ஹாட்மேக்கர். 13,500 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, தன்னுடைய பாராசூட்டை திறக்க முயற்சி செய்திருக்கிறார் அவர். அப்போது ஏற்பட்ட தவறினால் பாராசூட் எதிர்ப்பக்கம் திறக்க, கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார் ஹாட்மேக்கர். உடனே துரிதமாக செயல்பட்ட இவர் ரிசர்வ் பாராசூட் எனப்படும் ஆபத்து நிலையில் உபயோகிக்கப்படும் இரண்டாவது பாராசூட்டை திறந்திருக்கிறார்.
அதிர்ச்சி
ஆனால், ரிசர்வ் பாராசூட் திறந்தாலும் அதுவும் எதிர்ப்பக்கம் விரிந்து அவரை அதிவேகத்தில் இழுத்துச் சென்றிருக்கிறது. இதனை downplane என்கிறார்கள். இதனால் கடுமையான சுழற்சிக்கு ஆளான ஹாட்மேக்கர் மணிக்கு 125 மைல் வேகத்தில் தரையை நோக்கி விழ துவங்கினார். தரையை நெருங்கியதும் பாராசூட்டின் கயிறில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவர், தரையில் வந்து விழுந்திருக்கிறார்.
இதனால் அவருடைய கால், முதுகு மற்றும் மூட்டுகள் கடுமையாக சேதமடைந்தன. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். 25 நாட்களுக்கு பிறகு சுயநினைவு வந்திருக்கிறது ஹாட்மேக்கருக்கு.
காதல்
இவ்விபத்தில் சிக்கிய அனுபவம் குறித்து பேசுகையில்," என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. வேகமாக சுழல துவங்கினேன். என்னுடைய மூளை எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. சிலைபோல தரையை நோக்கி வந்துகொண்டிருந்தேன்" என்றார்.
ஹாட்மேக்கர் எழுந்து நடக்க இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனாலும் மீண்டு வந்த பிறகு மீண்டும் ஸ்கை டைவிங் செய்ய இருப்பதாக அறிவித்துள்ள இவர் "நம்முடைய வழியில் தடைகள் வந்தபோதும் நாம் மிகவும் விரும்பும் செயலை செய்யாமல் இருக்க முடியாது. மீண்டு வந்த பிறகு நான் என்னுடைய பயிற்சியில் மீண்டும் ஈடுபடுவேன்" எனக் கூறியுள்ளார் ஹாட்மேக்கர்.
13.500 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஹாட்மேக்கர் உயிர்பிழைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீர்னு வானத்துல தோன்றிய வித்தியாசமான மேகம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
- தப்பான லாட்டரி டிக்கெட் வாங்கிட்டோம்னு வருத்தப்பட்ட பெண்.. ஆனா கடைசில நடந்த ட்விஸ்ட்..!
- அமெரிக்காவில் வரவிருக்கும் புதிய சட்டம்.. மகிழ்ச்சியில் இந்தியர்கள்.. முழுவிபரம்..!
- அமெரிக்க வரலாற்றுலயே இதான் முதல்முறை.. கொண்டாடப்படும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்.. யார் இவர்?
- சதையுடன் இருந்த டைனோசர் கால்.. 66 மில்லியன் வருஷ கேள்விக்கு பதில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்.!
- அதிர்ஷ்டம்-னா அது இதுதான்.. சூறாவளியில் சிக்கி சிதைந்த காரிலிருந்து தப்பித்த இளைஞர்.. வைரல் வீடியோ..!
- நீங்க வாங்குனா மட்டும் போதும்.. வீட்டை ஃப்ரீயா கொடுத்து 22 லட்சம் பணமும் கொடுக்கும் நிறுவனம்.. ஓஹோ இதுதான் காரணமா?
- ஆப்பிள் Office-ல வெள்ளை நிற பவுடர் பாக்கெட்.. ஊழியர்களை உடனே வெளியேறச் சொன்ன மீட்புப்படை.. என்ன ஆச்சு..?
- மனித கால் தடமே படாத தீவை வாங்கிய 2 பேர்.. அதுக்கப்பறம் அவங்க செஞ்சது தான் ஹைலைட்டே..!
- பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர்… 2 மாதங்களுக்கு பிறகு நடந்த பெரும் சோகம்