திடீர்னு ஆரஞ்சு கலர்ல மாறிய வானம்.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..! எங்க தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்திடீரென வானம் ஆரஞ்சு நிறத்தில் மாறி, காற்றில் தூசுக்கள் நிரம்பினால் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்? அதனை தற்போது அனுபவித்து வருகிறார்கள் ஸ்பெயின் மக்கள்.
மணற் புயல்
சஹாரா பாலைவனத்தில் இருந்து புறப்பட்ட பிரம்மாண்ட மணற் புயல் மத்தியதரைக் கடலை கடந்து இப்போது ஸ்பெயினில் வீசி வருகிறது. அடுத்ததாக பிரிட்டனை இந்த புயல் தாக்கலாம் என எச்சரித்து உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
சீலியா எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்த மணற் புயல், கடுமையான வெப்பக் காற்றுடன் தூசுக்களை ஸ்பெயின் நாட்டின் தெற்குப் பகுதிகளில் கொட்டியது. ஸ்பெயினில் உள்ள Alicante பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வு துறை, 'மக்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்' என எச்சரித்து உள்ளது.
காற்றின் தரம் கடுமையாக குறைந்து இருப்பதால் வெளியே செல்லும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியும்படி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். நகர்ந்து வரும் இந்தப் புயல் நாளை பிரிட்டனை தாக்கலாம் எனவும் இதனால் பிரிட்டனில் காற்றின் தரம் குறையலாம் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்த்மா
காற்றில் தூசுக்கள் அதிகம் இருப்பதால் அதனை சுவாசிக்கும் போது, மக்களுக்கு இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படலாம் என எச்சரித்துள்ள மருத்துவர்கள் இதனால் சிலருக்கு ஆஸ்துமா வரலாம் எனவும் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய பிரிட்டனின் ஆஸ்துமா ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டாக்டர் ஆண்டி விட்டமோர்," சஹாராவில் இருந்து வீசும் இந்த மணற் புயலின் காரணமாக ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள 5.4 மில்லியன் மக்கள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படலாம். தூசு மற்றும் பிற காற்று மாசுபாடுகளின் காரணமாக ஆஸ்துமா நோய் பரவுகிறது. ஏற்கனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லும்போது தங்களுடைய ஆஸ்துமாவுக்கான இன்ஹேலரை (Reliever inhaler) எடுத்துச்செல்ல வேண்டும். நிலைமை மோசமானால் அதனை உடனடியாக உபயோகிக்க வேண்டும்" என்றார்.
ஸ்பெயினை தொடர்ந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் சில பகுதிகளிலும் வானம் ஆரஞ்சு நிறத்தில் மாறியதாக அந்நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உக்ரைன்-ல அந்த குண்டை யூஸ் பண்ணோம்னு ரஷ்யா கன்ஃபர்ம் பண்ணிடுச்சு ".. பிரிட்டன் பாதுகாப்புத்துறை போட்ட பரபரப்பு ட்வீட்..!
- இங்கிலாந்து ராணியின் பாதுகாப்பு படையில் இருந்து எஸ்கேப் ஆன வீரர்.."அத மட்டும் அவர் செஞ்சா அவ்ளோதான்".. கவலையில் பிரிட்டன்..!
- சுத்தி கஸ்டமர்ஸ் இருந்தப்போ.. உங்க கணவர் என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? கண்டுக்கொள்ளாத மனைவி.. இங்கிலாந்து பெண்ணிற்கு கிடைத்த நியாயம்
- ஆடையில்லாத உடலின் மேல் வைக்கப்படும் உணவு.. ஏடாகூடமாக யோசித்த ஹோட்டல்..!
- 'அந்த மாதிரி' படம் பாக்குறவங்களுக்கு செக்.. அவ்ளோ ஈசியா உள்ள போக முடியாது.. புதிய ரூல்ஸ் போட்ட நாடு
- முதல் குழந்தை பிறந்து 8 மாசம் தான் ஆச்சு.. அதுக்குள்ள 2-வது குழந்தை.. அது எப்படி சாத்தியம்? பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட காரணம்
- 'தப்பு தான்.. என்ன மன்னிச்சிடுங்க..' நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்.. ஏன் தெரியுமா?
- ஆஹா.. வேறலெவல் ஐடியா இது.. தம்பி எப்ப ஜாய்ன் பண்றீங்க.. அசந்துபோய் கூப்பிட்டு வேலை கொடுத்த கம்பெனி..!
- என்னது 72 வருசமா எங்கயுமே மாட்டலையா..! செம ‘ஷாக்’ கொடுத்த தாத்தா.. மிரண்டு போன போலீஸ்..!
- மனசுக்குள் இருந்த ரகசியம்.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனைவி.. கேட்ட உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தெறித்து ஓடிய கணவன்