VIDEO: ‘7 மணிநேர போராட்டம்’!.. மரணத்தை வென்ற 6 வயது சிறுமி.. ‘கதறியழுத அப்பா’.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பின் நடந்த.. மனதை உருக்கும் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஹாசா பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், கட்டிட இடிபாடுகளில் சிறுமி சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதில் சில தினங்களுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில், கேரளாவைச் சேர்ந்த சௌமியா என்ற செவிலியர் உயிரிழந்தார். கடந்த 7 வருடங்களாக செவிலியராக இஸ்ரேலில் அவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பத்தன்று தனது கணவருடன் சௌமியா வீடியோ காலில் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் சௌமியா தங்கியிருந்த குடியிருப்பு இடிந்து விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து நேற்று முன்தினம் கேரளாவில் உள்ள உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சுஷி எஸ்குண்டனா என்ற 6 வயது சிறுமி சிக்கிக் கொண்டாள். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்குபின் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். இதில் சுஷி எஸ்குண்டனாவின் தாய் மற்றும் 4 உடன் பிறப்புகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து தனது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதும், சுஷி எஸ்குண்டனாவின் தந்தை கதறி அழுந்த சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது. தற்போது சிறுமியும், அவரது தந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்