'கொரோனாவால் சீரழிந்த பொருளாதாரம்'... 'எதிர்ப்புகளுக்கிடையே'... '6 இந்தியர்களை சேர்த்து'... 'அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பாதிப்பினால் சீரழிந்த அமெரிக்காவின் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் தொழிலதிபர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவில், 6 இந்தியர்களை சேர்த்து அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி ஏராளமான உயிரிழப்புகளையும், பொருளாதார சீரழிவையும் அமெரிக்கா  சந்ததித்து வருகிறது. எனினும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக, அங்குள்ள பல மாகாணங்களில் இந்த மாதம் முதலே, லாக் டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அதிபர் நேற்று அறிவித்தார். ஆனால் உலக சுகாதார அமைப்பு உள்பட பல நாடுகள் தற்போது தற்போது பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா முன்னுரிமை கொடுப்பது தவறு என்று சுட்டிக் காட்டி வருகின்றனர்.

எனினும் இந்த எதிர்ப்புகளை மீறி, அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய குழு ஒன்றை அமைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். 'மாபெரும் அமெரிக்கப் பொருளாதார புத்தாக்க மீட்டெழுச்சி தொழிற்துறை குழு' என அழைக்கப்படும் இந்தக் குழு அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அறிவுரைகளை அமெரிக்க அரசிற்கு வழங்க உள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் சிறந்த புத்திசாலிகள், அறிவாளிகள், பல ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், அவர் வெளியிட்ட 200 தொழில்துறை முன்னணி பிரபலங்களில், தொழில்நுட்பத் துறையில் கூகுள் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சத்ய நாதெள்ளா, ஐபிஎம் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரோன் சஞ்சய் மெக்ரோத்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் உற்பத்தி துறையில் பெர்னோட் ரிச்சர்ட் நிறுவனத்தின் ஆன் முகர்ஜி, நிதித் துறை குழுவில் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்