"இதை சாதாரண குகைன்னு தான் நெனச்சோம்".. ஆராய்ச்சியாளர்களை அதிரவைத்த பிரம்மாண்ட துளை.. இந்த காடு முழுசும் இப்படித்தானாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றில் பிரம்மாண்ட துளை (sinkhole) ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Advertising
>
Advertising

Also Read | அப்பாவுடன் லிட்டில் பிரின்சஸ் அடிக்கும் லூட்டி..ஒளிஞ்சிருந்து மனைவி எடுத்த கியூட் வீடியோ..

சீனாவை சேர்ந்த புவியியல் ஆய்வு நிறுவனமான கார்ஸ்ட்-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் குவாங்சி ஜுவாங் என்னும் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் பிரம்மாண்ட  sinkhole இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பிரம்மாண்ட துளைக்குள் அதி உயரமான மரங்கள் வளந்திருப்பதாகவும், இதனுள் பல்வேறு வகையான விலங்குகள் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sinkhole

புவியலில் பல்வேறு ஆச்சர்யம் தரும் அமைப்புகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் இந்த sinkhole என்னும் பிராம்மாண்ட துளைகள். தரைப்பகுதியில் உள்ள அடுக்குகளில் ஏற்படும் அடர்த்தி அதிவேகத்தில் மாற்றமடையும்போது இப்படியான துளைகள் பூமியின் மேற்பரப்பில் தோன்றுவதாக கூறுகின்றனர் நிபுணர்கள். உதாரணமாக தார் சாலைகளில் திடீரென பெரும்பள்ளம் உருவாவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், சீனாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பல ஆண்டுகளுக்கு முன்பாக உருவானதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

630 அடி ஆழம்

இந்த துளை 630 அடி ஆழம் கொண்டதாகவும், இந்த துளையின் தரைப்பரப்பில் 131 அடி உயரத்திலான மரங்கள் வளர்ந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய கார்ஸ்ட் புவியியல் ஆராய்ச்சி அமைப்பின் தலைமை பொறியாளர் ஜாங் யுவான்ஹாய்," இந்த துளை 306 மீ நீளம், 150 மீ அகலம் மற்றும் 192 மீ ஆழம் கொண்டது. இதன் கன அளவு 5 மில்லியன் கன மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. ஆகவே இதனை மிகப்பெரிய பெரிய சிங்க்ஹோல் என வகைப்படுத்தலாம். இந்த துளைக்குள் 3 குகைகள் இருக்கின்றன. அவை இந்தத் துளை உருவான ஆரம்ப கட்டத்தில் தோன்றியதாக இருக்கலாம்" என்றார்.

குவாங்சி ஜுவாங் மலைப்பகுதியில் இப்படி, துளைகள் கண்டுபிடிக்கப்படுவது புதிதல்ல. இதுவரையில் இப்பகுதியில் 29 ராட்சத துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பல நீர் ஆதரமாக விளங்குவதாகவும் அவை அருகில் உள்ள மக்களின் தேவைகளுக்கு பயப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள துளையை ஆரம்பத்தில் குகை என்றே அப்பகுதி மக்கள் நினைத்திருக்கின்றனர். ஆனால், அது மிகப்பெரிய துளை என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CHINA, SINKHOLE, ANCIENT FOREST, சீனா, பிரம்மாண்ட துளை, புவியியல் ஆய்வு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்