திடீர்னு ஏற்பட்ட பிரம்மாண்ட துளை.. நடுங்கிப்போன மக்கள்.. ஆராய்ச்சியாளர்களையே அதிர வச்ச சம்பவம்.. உள்ளே அப்படி என்ன இருக்கு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிலி நாட்டில் பிரம்மாண்ட துளை ஒன்று உருவாகியுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களையே அதிர வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "துபாய்க்குனு சொல்லி ஏமாத்திட்டாங்க".. 20 வருஷமா அம்மாவை காண துடித்த மகள்.. எதேச்சையா யூட்யூபில் பார்த்த வீடியோவால் தெரியவந்த உண்மை..!

பிரம்மாண்ட துளை

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள காப்பர் சுரங்கத்தில் கடந்த வார இறுதியில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து சுமார் 665 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கத்தின் பணியாளர்களை அதிர வைத்திருக்கிறது ராட்சத துளை. காப்பர் சுரங்கத்தின் மையப்பகுதியில் சுமார் 82 அடி அகலத்துக்கு இந்த துளை உருவாகியிருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த அதிகாரிகள் இது எப்படி உருவானது? என்பது பற்றி அறிந்துகொள்ள முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

ஆராய்ச்சி

இதனை தொடர்ந்து, புவியியல் மற்றும் சுரங்க நிபுணர் குழுக்கள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. சுமார் 200 மீட்டர் ஆழம் இருக்கும் இந்த துளையின் ஆழத்தில் ஏதேனும் உலோகம் இருக்கிறதா? என்பது பற்றி அறிய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், அதற்குள் வெறும் நீர் மட்டுமே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த இடத்தை theCanadian Lundin எனும் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

தடை

இதனை தொடர்ந்து, அந்த பகுதிக்குள் மக்கள் யாரும் செல்லவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பேசிய புவியியல் மற்றும் சுரங்க நிபுணரான டேவிட் மாண்டினீக்ரோ,"இந்த துளை 200 மீட்டர் ஆழம் இருக்கிறது. கீழே எந்தப் பொருளையும் நாங்கள் கண்டறியவில்லை, ஆனால் நிறைய தண்ணீர் இருப்பதைக் கண்டோம். இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றார்.

இந்த துளை உருவாக்கத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த துளைக்கு அருகில் 600 மீட்டர் தூரத்தில் ஒரே ஒரு வீடு மட்டும் அமைந்திருக்கிறது. அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் குடியிருப்புகள் அமைந்திருக்கின்றன. இது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "வருஷத்துக்கு 10 கோடி பேர்".. சென்னையின் புதிய ஏர்போர்ட்-ல் அமைய இருக்கும் விசேஷங்கள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை..!

SINKHOLE, CHILE COPPER MINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்