"மக்களே இத நீங்க பாத்துருக்கீங்களா?".. 'கெத்தா' ஆரம்பிச்சியே 'கைப்புள்ள?'.. 'டிக்டாக்' சாகசத்தால் 'பாடகருக்கு' நேர்ந்த 'விபரீதம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க பாடகர் ஜேசன் டெரூலோ, டிக்டாக் சேலஞ்ஜ் ஒன்றை முயற்சி செய்யும் போது தனது பற்களை இழந்துள்ளார்.
ஊரடங்கு சமயத்தில் மக்களை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு சுவாரஸ்யமான, அதேசமயம் ஆபத்தான வீடியோக்களை எடுத்து அவ்வப்போது டிக்டாக்கில் பதிவேற்றி வந்தார் ஜேசன் டெரூலோ. இந்த நிலையில் ஒரு சவாலில் தோற்றுப் போனதால் தனது ஒரு பக்க புருவத்தை எடுப்பது, இன்னொரு சவாலில் தனது பல் வரிசையில் முன்னால் ஒரு பல் மட்டும் இல்லை என காட்டுவது என தொடர்ந்து பல வீடியோக்களை அவர்கள் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்து வந்தார்.
இந்நிலையில் மின்சார ட்ரில் ஒன்றில் சோளக் கதிரை செருகி வைத்து, அந்த ட்ரில் வேகமாக சுற்றும்போது சோளத்தை சாப்பிடும் சவாலை டிக்டாக்கில் ஜேசன் டெரூலோ மேற்கொள்ளும்போது அவருக்கு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “மக்களே இதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதுபோன்றதொரு முயற்சியை செய்ய வேண்டும் என்பதுதான் எனக்கு எப்போதுமே ஆசையாக இருக்கும்!” என்று சொல்லி வீடியோவை தொடங்கும் ஜேசன், மின்சார ட்ரில் இயங்கும்போது அதில் சோளம் வேகமாகச் சுற்ற அதை சாப்பிட வாயை வைக்கிறார்.
ஆனால் சட்டென்று வலியில் துடித்து சோளக்கதிரில் இருந்து வாயை எடுத்துக்கொள்கிறார். ஆனால் அவரது முன் பற்கள் உடைந்திருக்கின்றன. சோளத்திலும் லேசாக இரத்த தட்டுகள் இருக்கின்றன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரோட்ல கெடந்த பைக்குள்ள '7 கோடி' ரூபா... எடுத்துக்கிட்டு நேரா 'எங்க' போய் இருக்காங்கன்னு பாருங்க!
- "லாக்டவுன்ல செம்ம போர் அடிக்குதுப்பா!".. செல்ல 'மகளை' சமாதானப்படுத்த.. 'அப்பாவின்' அகில உலக 'ஐடியா'! வைரல் வீடியோ!
- அமெரிக்காவில் 'லைட்' அடிச்சு கொரோனாவை விரட்டுறாங்க...! 'ட்ரெயின், பஸ்ன்னு எல்லா இடத்துலையும்...' அதிரடி பரிசோதனை...!
- 'சீன' நிறுவனங்களுக்கு 'செக் வைக்கும்' மசோதா... அமெரிக்க 'செனட் சபையில்' நிறைவேறியது... 'சீனாவுக்கு' எதிரான 'வேலைகளைத்' தொடங்கியது 'அமெரிக்கா...'
- “கடந்த 35 வருஷத்துல இது ரொம்ப கம்மி!”.. 'அசராத' ஆராய்ச்சியாளர்கள்!.. 'அடுத்தடுத்து' கொடுக்கும் 'ஷாக்கிங்' ரிப்போர்ட்கள்!
- டைம் குடுத்து 'ஆப்பு' வைக்குறவங்களா நீங்க?... அசராமல் 'திருப்பி' அடித்த சீனா!
- இது என்ன 'ஒலிம்பிக் கோல்டு' மெடல் 'லிஸ்டா...?' இதைப் போயி 'கவுரவம்னு' சொல்றாரு... 'அதிபர் ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு...'
- 'ஒரு வாரத்திற்கும்' மேலாக 'மாத்திரை' போட்டு வருகிறேன்... உங்களுக்கும் வந்துடுச்சா 'மிஸ்டர் பிரசிடெண்ட்...' 'ட்ரம்பின் அசர வைக்கும் பதில்...'
- ‘சின்ன வயசுலேயே பெரிய மனசும்மா’.. இந்திய வம்சாவளி 10 வயது சிறுமியை ‘வெள்ளை மாளிகைக்கு’ அழைத்து கவுரவித்த டிரம்ப்..!
- இந்த ‘கொரோனா’ எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிருச்சு.. பகிரங்கமாக விமர்சித்த ‘ஒபாமா’.. அதுக்கு டிரம்ப் சொன்ன பதில்..?