‘திருவிழாவில் உற்சாக பாடியபோது’... ‘ஸ்டேஜில் சரிந்து விழுந்த இரும்புச் சாரம்'... வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மேடையில் உற்சாகமாக பாடிக் கொண்டிருந்த, பாடகர் மற்றும் அவரது இசைக் குழு மீது இரும்பு சாரம் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு அர்ஜென்டினாவில் உள்ள ஜூஜூய் மாகாணத்தில் எல் தலார் என்ற இடம் உள்ளது. இங்கு ஊர் திருவிழாவை முன்னிட்டு,  லாஸ் கிரியோலஸ் என்ற இசைக் குழு மெல்லிசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து இரவு நேரத்தில், ஊர் மக்கள் கூடியிருக்க, லூயிஸ் விலன் என்ற பாடகர் நடுவில் நின்று பாடிக் கொண்டிருந்தார். அவரது இசைக் குழுவினர்கள் இசைக் கருவிகளை வாசித்துக்கொண்டிருந்தனர்.

மேடையில் லூயிஸ் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்த போது, மேடையின் மேல் விளக்குகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம், திடீரென எதிர்பாரதவிதமாக சரிந்து விழுந்தது. இதனால், இசைக் குழுவினர் செய்வதறியாது திகைத்தனர். இரும்புச் சாரம் லூயிசின் தலையில் தாக்கியதில், அவர் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். மேலும், அவரது இசைக் குழுவைச் சேர்ந்த இவான் லூனா என்பவரும் தரையில் விழுந்தார். இதையடுத்து, பக்கத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால், இருவருக்கும் முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு, பின்னர் வேனில் மருத்துவமனைக்கு சென்றனர்.

இந்த விபத்தின்போது நல்லவேளையாக, தொப்பி அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரி தப்பினேன் என்று பாடகர் லூயிஸ் தெரிவித்துள்ளார். எனினும் எதனால் இரும்புச் சாரம் விழுந்தது என்று தெரியவில்லை. அவரது தலையில் காயத்திற்கான சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் இதேபோல், இசை நிகழ்ச்சியில் இளம் பாடகி ஒருவர் பாடி, நடனமாடிக்கொண்டிருந்தபோது, மேடையில் வண்ண வெடிகள் வெடித்ததில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

AREGNTINA, MUSICTROOP, VIRAL, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்