AaronCarter : பாத் டப்பில் சடலமாக கிடந்த பிரபல அமெரிக்க பாடகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் ஆரோன் கார்டர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா.. நடுரோட்டில் பர்த்டே கேக் வெட்டிய ரக்கடு பாய்.. ஸ்பாட்லயே போலீஸ் கொடுத்த தண்டனை.. வீடியோ..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா எனும் இடத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி பிறந்தவர் ஆரோன் கார்டர். புகழ்பெற்ற இசைக்குழுவான Backstreet Boys-ன் பாடகர் நிக் கார்டரின் சகோதரர் ஆரோன். தன்னுடைய 7 வயதில் இருந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்த ஆரோன், 1997 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். அந்த ஆண்டே Backstreet Boys இசைக்குழுவில் அவர் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளில் தோன்றினார்.

அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு ஆரோன் வெளியிட்ட Aaron’s Party (Come Get It) ஆல்பம் 3 மில்லியன் பிரதிகள் விற்று ரசிகர்களிடையே அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இதனை அடுத்து அவர் நிக்கோலோடியன் மற்றும் டிஸ்னி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்றார்.

இந்நிலையில், நேற்று காலை ஆரோன் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கலிபோர்னியாவின் லான்காஸ்டரில் உள்ள அவரது வீட்டில் பாத் டப்பில் ஒரு சடலம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆரோனின் குடும்பத்தினர் அவர் மரணமடைந்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

கலிபோர்னியா கவுண்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இருந்த பாத் டப்பில் இருந்து ஆரோன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் ஆரோனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பாடகர் நிக் தனது சகோதரர் ஆரோனின் மறைவு பெரும் அதிர்ச்சியை அளித்திருப்பதாகவும், அவர் மீது தான் கொண்டிருந்த பாசம் ஒருபோதும் குறைந்ததில்லை எனவும் உருக்கத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆரோனின் மறைவையடுத்து, இசை கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

Also Read | பிரபல தமிழ் எழுத்தாளர் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தமிழிலேயே போட்ட நெகிழ்ச்சியான ட்வீட்.. முழு விபரம்..!

SINGER, AARON CARTER, SINGER AARON CARTER, CALIFORNIA, INVESTIGATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்