கொசு 'லவ்' பண்ணுதா...? அப்போ தானே 'பெண்' கொசுவை ஏமாத்த முடியும்...! - 'டெங்கு'வை ஒழிக்க மாஸ்டர் பிளான்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மலட்டு தன்மையுள்ள ஆண் கொசுக்களை காதலித்து ஏமாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது சிங்கப்பூர்.
பொதுவாகவே ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது. பெண் கொசுக்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக மனிதர்களை கடிப்பதும் அதன் மூலம் மனிதர்களுக்கு மலேரியா, டெங்கு, ஜகா போன்ற வைரஸ்கள் பரவி வருகிறது.
இதனால் கொடிய நோய்களைப் பரப்பும் பெண் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மொத்தம் 57 லட்சம் மக்கள் வசிக்கும் சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் 20,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் கொசுக்களால் பரவும் நோய் தொற்று மூலம் இறக்கின்றனர்.
இதனால் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவை எடுத்து பரிசோதித்தும் வருகின்றனர்.
அதாவது ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆண் கொசுக்களுக்கு வோல்பாசியா என்ற பாக்டீரியாவால் தாக்கச் செய்து மரபணு மாற்றப்பட்டு, மலட்டு தன்மையுடையதாக மாற்றி அவை வெளியுலகத்திற்கு விடப்படுகின்றன.
மேலும் இந்த மரபணு மாற்றப்பட்ட மலட்டு கொசு, சாதாரண பெண் கொசுக்களை காதலித்து இனப்பெருக்கம் செய்யும் போது பெண் கொசுக்களுக்கு முட்டை பொரிக்க முடியாது. அப்படியே பெண் கொசுக்கள் முட்டையிட்டாலும் அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காது.
அதுமட்டுமில்லாமல், மலட்டு ஆண் கொசுக்களின் உடலில் உள்ள புரதம் பெண் கொசுக்ளுக்குள் சென்று மனிதர்களைக் கடிக்கும் நிலையை அடையும் முன்பே பெண் கொசுக்கள் இறந்து விடுமாம்.
இந்த புதிய ஆய்வானது தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், ஆபத்தை ஏற்படுத்தும் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களின் அளவைக் குறைத்து அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்ப் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சிங்கப்பூரை போலவே ஆஸ்திரேலியாவும் இம்முறையை பின்பற்றி நோய்களைப் பரப்பும் பெண் கொசுக்களைக் கட்டுப்படுத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவும் இதே முறையை பின்பற்றும் வகையில் சுமார் 70 கோடிக்கும் அதிகமான கொசுக்களை ஆய்வகத்தில் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு பக்கம் கொரோனா பீதி, இன்னொரு பக்கம் இதுவேறையா'... தூக்கம் தொலைத்த சென்னை மக்கள்!
- 'இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லயே!'.. ஊரடங்கு காரணமாக... 'ஜூம்' செயலி மூலம் தூக்கு தண்டனை!.. நீதிமன்றம் அதிரடி!
- கொரோனா நோயாளிகளுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஒரு மெசேஜ்.. மன்னிப்பு கேட்ட நாடு..!
- "கொரோனாவ சொல்லி எதுக்கு வேணாலும் தடை போடலாம்..." "ஆனா இதுக்கு தடை போட முடியுமா?..." 'அம்மா அம்மாதான்...'
- ‘வெண்டிங் மெஷின் மூலம் பொது இடங்களில்'... ‘இலவசமாக முகக் கவசம்’... ‘நாட்டு மக்களுக்காக’... 'அசத்தும் பிரபல நிறுவனம்’...!
- உலகையே 'மிரட்டும்' கொரோனாவை... 'மிகக்குறைந்த' உயிரிழப்புடன் கட்டுப்படுத்தி... 'வியப்பை' ஏற்படுத்தியுள்ள 'நாடுகள்!'... எப்படி சாத்தியமானது?...
- 'ஜூன் 1' வரை ஊரடங்கு 'நீட்டிப்பு'... கொரோனா 'பரவலை' தடுப்பதற்காக... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...
- 1,049 பேருக்கு 'பாதிப்பு'... 5 பேர் 'பலி'... 'கொரோனா' பாதிப்பு 'கட்டுக்குள்' இருந்தாலும்... 'ஒரு மாதம்' ஊரடங்கு பிறப்பித்து 'பிரதமர்' அறிவிப்பு...
- கொசு கடிச்சா கொரோனா பரவுமா?.. மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்..!
- 'லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது’... ‘இதையும் சேர்த்து கண்டிப்பா பண்ணனும்'... 'கொரோனாவை கட்டுப்படுத்த அறிவுரை சொன்ன'... WHO எமெர்ஜென்சி நிபுணர்!