அந்த முடிவு எடுக்குற ‘அதிகாரம்’ எனக்கு மட்டும்தான் இருக்கு.. அதிபர் ‘டிரம்ப்’ அதிரடி..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஊரடங்கை தளர்த்தும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கி 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஊரடங்கை தளர்த்தி வணிக நிறுவனங்களை திறக்கும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநர்களுக்கும் கிடையாது என்றும், அந்த அதிகாரம் தனக்கே உரியது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், நியூயார்க், லூசியானா, மிச்சிகன் போன்ற பகுதிகளில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், மற்ற மாகாணங்களில் பெரும் பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்படும் என்றும், ஆனால் எந்தெந்த மாகாணங்கள் என்பதை தற்போது கூறமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தளர்த்தும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநர்களுக்கும் கிடையாது என்றும், அது தனக்கே உரிய அதிகாரம் என்றும் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
'ஒரே நாளில் கிடைச்ச மரண அடி'...'வல்லரசு நாடுன்னு மட்டும் சொல்லாதீங்க'...நிலைகுலைந்த அமெரிக்க மக்கள்!
தொடர்புடைய செய்திகள்
- போன மாசம் '1 லட்சம்' பேருக்கு... வேலை வழங்கிய 'பிரபல' நிறுவனம்... இந்த மாசம் 'எவ்ளோ' பேருக்குன்னு பாருங்க?
- 'அமெரிக்காவில்' மீண்டும் தொடங்கியது 'WWE'... 'ரணகளத்துலயும்' பொழுதுபோக்குக்கு 'முக்கியத்துவம்'... 'முடங்கிக்' கிடக்கும் மக்களுக்கு 'இது தேவை'...
- 'இந்த' தேதிக்குப்பின் ஊரடங்கில்... சில 'கட்டுப்பாடுகள்' தளர்த்தப்பட வாய்ப்பு: பிரதமர் மோடி
- 'தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில்...' 'வௌவால்களுக்கு கொரோனா தொற்று...' 'இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்...'
- 'சானிடைஸருக்கு' ஏற்பட்ட கடும் கிராக்கி... வேற வழி தெரியல...'வோட்காவை' கையிலெடுத்த நாடு!
- "நோய் நொடிகளால் பயம் அதிகரிக்கும்..." 'மீனாட்சி அம்மன்' கோயில் 'பஞ்சாங்க கணிப்பு' பலித்தது... 'சார்வரி' ஆண்டுக்கான 'பஞ்சாங்கம் இன்று வாசிப்பு...'
- 'கொரோனா' அறிகுறியுடன் தப்பி ஓடிய... 'டெல்லி' வாலிபரை வளைத்துப்பிடித்த காவல்துறை... எங்க 'பதுங்கி' இருந்துருக்காரு பாருங்க!
- #COVID19: “சொந்த ஊருக்கு அனுப்புங்க!”... ஊரடங்கு நீடித்ததால் ஒரே இடத்தில் கூடிய 1000 பேர்.. ‘தடியடி நடத்திய போலீஸார்!’.. பரபரப்பு வீடியோ!
- 'மே' முதல்வாரத்தில் அமெரிக்கா 'முழுமையாக'... அதிகரிக்கும் 'பலி' எண்ணிக்கைக்கு இடையே... அடுத்தடுத்து 'அதிர்ச்சி' கொடுக்கும் 'ட்ரம்ப்'...
- 'அட...!' 'இந்த ஐடியா சூப்பரா இருக்கே...' "ATM ஸ்டைல்ல ரேஷன் அரிசி விநியோகம்" 'நோ பதுக்கல்...' நோ பற்றாக்குறை...' 'நோ வெய்ட்டிங்...' 'ஃபுல் சேஃப்டி...' '24 ஹவர்ஸ் சர்விஸ்...'