'ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா' கையெழுத்து இயக்கம்... 'சில மணி' நேரத்தில் 'கையெழுத்திட்டவர்களின்...' 'மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'அடுத்து அமெரிக்க ஆதரிக்க போகும் நாடு...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா விவகாரத்தில் சீனாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று கூறி, அமெரிக்க வாழ் இந்திய பெண் தலைவர் நிக்கி ஹாலி கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய தொற்று என்பதை சீனா தொடக்கத்தில் மறைத்து விட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இது தொடர்பாக எச்சரித்தவர்களையும் சீன கம்யூனிஸ்டு அரசு கைது செய்து, உண்மை தகவல்களை வெளியிடாமல் மறைத்துவிட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராகவும், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராகவும் இருக்கும் இந்திய வம்சாவளி பெண் தலைவர் நிக்கி ஹாலி, இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான கோரிக்கை மனுவாக இந்த கையெழுத்து இயக்கம் அமைந்துள்ளது. அவர் 1 லட்சம் பேரின் கையெழுத்துக்களை பெற முடிவு செய்துள்ளார்.
இந்த இயக்கத்தை தொடங்கிய சில மணி நேரத்தில் 40 ஆயிரம் பேர் அதில் கையெழுத்து போட்டுள்ளனர். ‘ஸ்டாப் கம்யூனிஸ்டு சீனா’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த கையெழுத்து இயக்கம் சீனாவை கொரோனா விவகாரத்தில் பொறுப்பெற்றுக் கொள்ள செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக ஹாலி தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கியதை சீனா மூடி மறைத்ததா? என்பதை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முக்கிய மருத்துவ சாதனங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவை சார்ந்து நிற்பதை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், சீனாவுக்கு எதிராக தைவானை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவை விட 'இதுதான்' இப்போ ரொம்ப முக்கியம்... அமெரிக்காவுக்கு 'போட்டியாக' களத்தில் குதித்த சீனா!
- வடகொரிய அதிபர் 'உயிருடன்' தான் இருக்கிறார்... 'மர்மங்களுக்கு' விடையளித்த அதிகாரி!
- 'எம்.பி குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா...' 'எப்படி வந்துச்சுன்னு சந்தேகமா இருக்கு...' தனிமைப்படுத்தி கண்காணிப்பு...!
- 5 வருட 'ரகசிய' திட்டம்... அமெரிக்கா 'அசந்த' நேரம் பார்த்து... அடிமடியில் 'கைவைத்த' சீனா?
- ”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்?” - உலக அரசியல் ஆய்வாளர்கள்!
- வெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்?
- குன்றத்தூர்: 'மருத்துவமனைக்கு' கொண்டு செல்லும்போது 'உயிரிழந்த' 36 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி!'
- அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம்!?.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு!.. வட கொரியாவில் உச்சகட்ட பரபரப்பு!
- '24 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 64 பேருக்கு கொரோனா!'.. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
- “முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு!”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி!'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி!