"இத்தன வருசத்துல எவ்ளோ தடவ பாத்துருப்போம், அப்ப கூட தெரியாம போச்சே".. 7 வருசம் கழிச்சு தெரிய வந்த 'உண்மை'..
முகப்பு > செய்திகள் > உலகம்Texas பகுதியை சேர்ந்த இருவர், சுமார் 7 ஆண்டுகளாக அடிக்கடி சந்தித்து கொண்ட நிலையில், அவர்களுக்குள் இருந்த உறவு குறித்து நெகிழ்ச்சி தகவல் ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது.
Raymond Turner என்பவர் தனது குடும்பத்தினருடன், Houston பகுதியில் இருந்து Texas பகுதிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு குடி பெயர்ந்துள்ளனர்.
அங்கே அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றின் ரெக்கார்ட்டிங் ஸ்டூடியோவில் Producer ஆகவும் ரேமண்ட் பணிபுரிந்து வந்துள்ளார். இங்கே உள்ள குழந்தைகள் பாடுவதை ரெக்கார்ட் செய்வது உள்ளிட்ட பணிகளில் ரேமண்ட் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ரேமண்ட் பணிக்கு சேர்ந்த அதே ஆண்டில் இருந்து, கிறிஸ்டினா என்ற பெண்ணும் தனது நான்கு வயது மகனை அந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. கிறிஸ்டினா தனது மகனை மருத்துவமனை அழைத்து செல்வதற்கு முன்னால், அங்கே உள்ள ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருக்கும் ரேமண்ட்டின் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் குழந்தைகள் பாடுவதையும் தனது மகனுடன் கவனித்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த ஆண்டின் போது, தனது வம்சாவளி குறித்து அறிவதற்காக தனது DNA-வை மரபியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிற்கு ரேமண்ட் கொடுத்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கடந்த பல ஆண்டுகளாக மருத்துவமனையில் பார்த்து கொள்ளும் கிறிஸ்டினா மற்றும் ரேமண்ட் ஆகியோர், உடன் பிறந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக, தத்தெடுத்து வளர்க்கப்பட்டு வந்த கிறிஸ்டினாவும் தனது ரத்த பந்தத்தில் வரும் குடும்பத்தை கண்டுபிடிக்க கடந்த 2006 ஆம் ஆண்டு, DNA-வை நிறுவனத்திற்கு சமர்ப்பித்துள்ளார். அப்படி இருக்கையில் தான், கடந்த சில மாதத்திற்கு முன்பாக கிறிஸ்டினா மற்றும் ரேமண்ட் DNA பொருந்தி போயுள்ளது. தொடர்ந்து, ரேமண்ட் மனைவி, கிறிஸ்டினாவை பேஸ்புக் மூலம் கண்டுபிடித்து அவருடன் பேசி வந்துள்ளார்.
அப்படி ஒரு சூழ்நிலையில், மருத்துவமனையில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் சந்திக்கும் ரேமண்ட் புகைப்படங்கள், அவரது மனைவியின் பேஸ்புக் பக்கத்தில் இருப்பதை கிறிஸ்டினா பார்த்ததாக கூறப்படுகிறது. அதே போல, தனது கணவர் குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரிவதை குறிப்பிட்டு, அதன் பெயரையும் ரேமண்ட் மனைவி, கிறிஸ்டினாவிடம் தெரிவிக்கவே, ரேமண்ட் தன்னுடைய உடன்பிறந்த சகோதரன் என்பது கிறிஸ்டினாவுக்கு தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒருவருக்கு ஒருவர், சந்தித்திருந்த போதும், தாங்கள் உடன்பிறந்தவர்கள் என்பது இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் தெரிய வந்தது, அவர்களை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்த குழந்தைகள் மருத்துவமனை தங்களின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட, நெட்டிசன்கள் பலரும் திரைப்படத்தில் வருவது போல ஒரு நிஜ சம்பவம் என மெய்சிலிர்த்து போய் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எலான் மஸ்க்கின் புதிய பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க.. மொத்த அமெரிக்காவும் ஷாக் ஆகிடுச்சு..!
- ஒரு வாரமா மாலுக்கு வெளிய நின்னுட்டு இருந்த கார்.. "பக்கத்துல போய் கண்ணாடி வழியா பாத்ததுல.." அரண்டு போன காவலாளி
- ஊருக்கு வெளில ரொம்ப நேரமா தனியா நின்ன ட்ரக்.. சந்தேகப்பட்டு கதவை திறந்த போலீஸ்.. கொஞ்ச நேரத்துல உயர் அதிகாரிகளுக்கு பறந்த போன்கால்..!
- நம்பி வந்த ஜோடிகளின் 2000 அந்தரங்க வீடியோ.. WiFi வடிவில் ரகசிய கேமரா .. நடுங்க வைத்த உரிமையாளர்.. சிக்கியது எப்படி?
- "என்னடா சொல்றே??... நீ என்னோட அண்ணனா??... ஒரே 'ஸ்கூல்'ல படிச்சப்போ கூட தெரியாம போச்சே..." அதிர்ந்து போன 'இளைஞர்'... இது வேற 'லெவல்' சோதனை!!
- VIDEO: கடைக்கு போய்விட்டு வீடு திரும்பிய ‘தாய்’ கண்ட காட்சி.. ‘கோழியை அமுக்குற மாதிரி ஒரே அமுக்கு’.. வசமாக சிக்கிய இளைஞர்..!
- பூட்டிய ரூமுக்குள் ‘10 வருஷம்’ இருந்த அண்ணன், அக்கா, தம்பி.. ‘கதவை உடைச்சு உள்ள போங்க’.. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..!
- "'30' வருஷமா ஒண்ணா 'சந்தோஷமா' வாழ்ந்தாங்க... இப்போ 'மரணத்தால' கூட அவங்கள 'பிரிக்க' முடியல..." மனதை சுக்கு நூறாக்கிய 'துயரம்'!!!
- "'5' வயசுலயே 'கொரோனா'வால பெற்றோர்களை இழந்த... 'சிறுவனின்' 'பிறந்தநாளை'க் கொண்டாட.. ஊரே ஒன்று கூடி செய்த மாஸ் 'ஏற்பாடு'... நெகிழ்ச்சி 'சம்பவம்'!!!
- ‘90 சதவீதம் பயனளிக்கும்’... ‘கொரோனா தடுப்பு மருந்தை’... ‘முதல் கட்டமாக இந்த 4 இடங்களுக்கு’... ‘வழங்க பைசர் நிறுவனம் முடிவு’...!!!