'ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்'... கடும் 'எச்சரிக்கை' விடுத்த 'அதிபர்'... பிலிப்பைன்ஸில் 'நிலவரம்' என்ன?....

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்  தற்போது 190 நாடுகளுக்கு மேல் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பான்மையான நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.

இந்நிலையில் பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் போலீசார் மற்றும் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிலிப்பைன்ஸில் இதுவரை 2,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமானவர்கள் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

CORONAVIRUS, PHILIPPINES, COVID-19, PRESIDENT, RODRIGODUTERTE, SHOOT, DEAD, LOCKDOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்