வெறும் 'ஏவுகணை' சோதனை மட்டும் பண்ணிட்டு இருக்கோம்னு நினைச்சீங்களா...? 'வேலை பயங்கர ஸ்பீடா நடந்திட்டு இருக்கு...' - 'நடுங்க' வைக்கும் 'சாட்டிலைட்' புகைப்படம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சமீபத்தில் வட கொரியாவில் (North Korea) நடந்த இரண்டு ஏவுகணை (missile) சோதனைகள் உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது.
இது குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா (America), வட கொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் கடும் அச்சுறுத்தலாக உள்ளது எனத் தெரிவித்தது.
இந்த நிலையில், தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா புதன் கிழமையன்று (15-09-2021) கிழக்கு கடற்பகுதியில் இரு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. ஒரே வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆய்வு செய்து வருவதாக அறிக்கை வெளியானது.
இந்நிலையில் தற்போது வடகொரியா தனது அணுசக்தி வளாகத்தின் உள் இருக்கும் யுரேனியம் (uranium) செறிவூட்டல் ஆலையை விரிவாக்கம் செய்யும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாக்ஸர் விண்வெளி நிறுவனம், வட கொரியாவின் யோங்பியோன் அணுசக்தி வளாகத்தில் 10,760 சதுரடி பரப்பளவில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தின் உற்பத்தியை வடகொரியா 25 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிபுனர்கள் கூறியுள்ளனர். அணு ஆயுதங்களைத் தாங்கி தொலை தூரம் சென்று தாக்க கூடிய அதிநவீன ஏவுகணைகளை வட கொரியா சமீபத்தில் சோதனையிட்டது ஜப்பான் மற்றும் தென் கொரியாவை அச்சத்தில் உறைய வைத்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ரயிலில் இருந்து கிளம்பி துல்லியமாக தாக்கும் ஏவுகணை என தொடர்ச்சியாக உலக நாடுகளை மிரட்டி வருகிறது.
2017-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வட கொரியா எந்த அணு ஆயுத சோதனைகளையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்று வட கொரியாவுக்கு ஐநாவின் சர்வதேச அணு சக்தி முகமையும் கோரிக்கை விடுத்து வருகிறது.
ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், சத்தமில்லாமல், அணு ஆயுத சோதனைகளை, அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரிய அரசு தீவிரமாக நடத்தி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரயில்' அப்படியே மெதுவா 'மூவ்' ஆயிட்டே இருக்கும்...! 'திடீர்னு உள்ள இருந்து...' இனி எவனும் நம்ம பக்கம் 'தலை' வச்சு கூட 'படுக்க' கூடாது...! - அடுத்தடுத்து 'பக்கா' சம்பவம் செய்த நாடு...!
- நம்மள நிம்மதியா 'தூங்க' விடக்கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்க...! 'அலறும் அண்டை நாடுகள்...' - இந்த ஏவுகணையோட 'பவர்' பத்தி கேட்டா மயக்கமே வந்திடும்...!
- இப்படியொரு 'ராக்கெட்' லாஞ்சரா...! 'இனி எவனாச்சும் நம்மள நெருங்கட்டும், அப்புறம் இருக்கு...' - வயித்துல புளிய கரைக்குற மாதிரி 'மாஸ்' சம்பவம் செய்த நாடு...!
- அய்யோ, 'மறுபடியும்' ஆரம்பிச்சிட்டாங்களா...? 'சாட்டிலைட்' புகைப்படத்தில் தெரிய வந்துள்ள 'அதிர' வைக்கும் தகவல்...! - உறுதிப்படுத்திய ஐ.நா...!
- இது பச்சை துரோகம்...! இது 'continue' ஆச்சுன்னா நாங்க சும்மா விடமாட்டோம்...! 'நாங்க ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணியாச்சு...' - கடும் 'எச்சரிக்கை' விடுத்த கிம் ஜாங் உன்னின் சகோதரி...!
- நிம்மதியா படுத்து தூங்கணும்னு ஆசை இருக்கா...? இருந்துச்சுன்னா 'அத' மட்டும் பண்ணாதீங்க...! - அமெரிக்காவை எச்சரித்த வடகொரிய அதிபர் கிம்மின் தங்கச்சி...!
- 'நம்மதாம்ல லேட்டு'!.. இங்கெல்லாம் ஆல்ரெடி புத்தாண்டு பிறந்தாச்சு!... ஆனா ‘கட்டக் கடைசியாக’ புத்தாண்டு பிறக்கப் போவது இவங்களுக்கு தான்!
- 'மரண பயத்தில்'... 'ரகசியமா கிம் ஜாங் உன் செஞ்ச காரியம்???'... 'அதுவும் சீனா உதவியோட?!!'... 'பகீர் குற்றச்சாட்டால் கிளம்பியுள்ள புது சர்ச்சை!!!'...
- ‘எதிர்பாராம நடந்திருச்சி மன்னிச்சிருங்க’.. அரிதிலும் அரிது.. மன்னிப்பு கேட்ட ‘வடகொரிய’ அதிபர்.. காரணம் என்ன..?
- 'எங்கிட்ட அவரு எல்லாமே சொல்லுவாரு'... 'ட்ரம்ப்பிடம் கிம் ஜாங் உன் பகிர்ந்த 'பகீர்' தகவல்!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் ரகசியம்'...