ஒருகாலத்துல நாடுகடத்தப்பட்டவர்.. இன்று பாகிஸ்தானின் பிரதமர்.. யார் இந்த ஷெபாஸ் ஷெரிஃப்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் ஷெபாஸ் ஷெரிஃப்.

Advertising
>
Advertising

பதவி விலகிய இம்ரான் கான்

சமீப நாட்களாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவந்தன. இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ-இன்சாப் கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை கட்சிகள் வாபஸ் வாங்கியதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது அக்கட்சி. இதன் காரணமாக இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியிடம் சென்றிருக்கிறது ஆட்சி.

அந்த கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃப் நேற்று பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் இடையே இம்ரான் கான் தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார்.

ஷெபாஸ் ஷெரிஃப்

பாகிஸ்தானின் பிரதமராக மூன்று முறை இருந்த நவாஸ் ஷெரீஃப்பின் இளைய சகோதரர்தான் இந்த ஷெபாஸ் ஷெரிஃப். லாகூரில் பிறந்து வளர்ந்த இவர், அங்கு உள்ள அரசு கல்லூரியில் படித்துவிட்டு தந்தையுடன் இணைந்து எஃகு தொழில் இறங்கினார். அதன் பிறகு 1980 களில் அரசியலில் நுழைந்தார் ஷெபாஸ் ஷெரிஃப்.

தனது மூத்த சகோதரர் ஏற்கனவே அரசியலில் இருந்தன் காரணமாக அதனால் ஆர்வம் கொண்டு 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆனார். அதன்பிறகு படிப்படியாக வளர்ந்த ஷெபாஸ் ஷெரிஃப், 1997 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் ஆனார்.

வளர்ச்சி

முதலமைச்சராக பதவியேற்றதும் கல்வி, சுகாதாரம், தொழில்துறை விவசாயம் ஆகிய துறைகளில் பல புதிய திட்டங்களை கொண்டுவந்தார். மேலும், நவீன போக்குவரத்து திட்டங்களையும் செயல்படுத்தினார். இதன் காரணமாக பஞ்சாப் மாகாண மக்களிடத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றார் ஷெபாஸ் ஷெரிஃப்.

ஆட்சி கவிழ்ப்பு

பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக ஷெபாஸ் ஷெரிஃப் பதவியேற்று 2 ஆண்டுகளில் ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதனால் 2000 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு ஷெபாஸ் ஷெரிஃப் நாடுகடத்தப்பட்டார். அதன் பிறகு 7 ஆண்டுகள் அங்கேயே வசித்துவந்தார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பிய இவர் அடுத்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் மாகாண தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சர் ஆனார். அடுத்த தேர்தலிலும் பஞ்சாப் மாகாண மக்கள் இவருக்கே வாய்ப்பை அளித்தனர்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு தேசிய அரசியல் கால் வைத்தார் ஷெபாஸ் ஷெரிஃப். இவரது சகோதரர் நவாஸ் ஊழல் வழக்கில் சிக்கியதால் பிரதமர் பதவியை இழந்த பின்னர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை விட்டும் தன்னை விடுவித்துக்கொண்டார். அப்போது அந்த தலைமை பொறுப்புக்கு வந்தார் ஷெபாஸ் ஷெரிஃப்.

சிறைவாசம்

2018 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் ஆட்சியில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக 2021 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த இவர் தற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

முன்னதாக ஷெபாஸ் ஷெரிஃப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PAKISTAN, SHEHBAZSHARIF, IMRANKHAN, பாகிஸ்தான், இம்ரான்கான், ஷெபாஸ்ஷெரிஃப்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்