என்னது ஹார்ட்டின் எமோஜி அனுப்புனா 5 வருசம் ஜெயில் தண்டனையா?.. காதலர் தினத்தில் வந்த ‘ஷாக்’ நியூஸ்.. எங்க தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற ஹார்ட்டின் எமோஜீயை அனுப்பியதாக புகார் எழுந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி நாட்டின் சைபர் கிரைம் அந்நாட்டு பொதுமக்களை எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தகவல் பரிமாற்றத்துக்காக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அப்போது பலரு தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக சிவப்பு நிற ஹார்ட்டின் எமோஜீயை அனுப்புகின்றனர். இந்த சூழலில் சவுதி அரேபியாவில் ஹார்ட்டின் எமோஜியை அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கபடும் என அந்நாட்டு சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா சட்டத்தின்படி, இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா
இதுகுறித்து சவுதி அரேபியாவின் மோசடி புகார்களுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற ஹார்ட்டின் எமோஜீயை ஒருவரது விருப்பம் இல்லாமல் அனுப்புவது துன்புறுத்தல் குற்றத்திற்கு சமம். ஆன்லைனில் சேட்டிங் செய்யும் போது சில படங்கள் மற்றும் எமோஜீக்களை பயன்படுத்துவதால், எதிர்தரப்பினர் காயமடைந்ததாக புகார் தொடர்ந்தால், அது துன்புறத்தல் குற்றமாக கருதப்படும். எந்த ஒரு நபருடனும் அவர்களின் அனுமதியின்றி உரையாடலில் ஈடுபடுவதையோ அல்லது சங்கடமாக உணர வைக்கும் வகையில் உரையாடல்களில் ஈடுபடுவதையோ, சிவப்பு நிற ஹார்ட்டின் எமோஜீக்களை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்ட்டின் எமோஜி
மேலும் ஒரு நபரின் தன்மானத்தை தொடும் அல்லது பாலியல் அர்த்தத்துடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு செயலும், சைகையும் துன்புறுத்தல் என்றே வரையறுக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் சிவப்பு நிற எமோஜீக்கள் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் போன்ற சமூகத்தின் வழக்கப்படி பாலியல் அர்த்தங்களுடன் தொடர்புடைய எமோஜீக்களும் இதில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சிறை தண்டனை
இதுபோன்ற எமோஜீக்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், எதிர் தரப்பில் உள்ளவர் இதன்மூலம் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்து, அனுப்பியவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினமான நேற்று இதுபோன்ற தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Unknown நம்பரில் இருந்து வந்த வாட்ஸ்அப் வீடியோ கால்.. Attend பண்ண இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- ஜாக்கிரதை..!- வாட்ஸ்அப்-ல் அதிர்ஷ்டக் காத்து வீசுதா? அது உங்களுக்கு விரிச்ச மோசடி வலையா இருக்கலாம்..!
- இந்த 'எட்டுக்குள்ள' ஒன்று இருந்தாலும்.. உங்க வாட்ஸ் அப் காலி.. நீங்களே பாருங்க
- என்னங்க, 2 வருஷமா 'மெசேஜ்' மட்டும் பண்றீங்க...! என்ன வந்து 'பார்க்கணும்'னு தோணவே இல்லையா...? - கிளம்பி போனவருக்கு 'லைஃப்லாங்' மறக்க முடியாத அளவுக்கு 'நடந்த' சம்பவம்...!
- 'தாயா, பிள்ளையா பழகிட்டு இருக்கோம்'... 'என் மேல இப்படி ஒரு அபாண்டமான பழிய போடுறீங்க'... உடைந்து நொறுங்கிய மார்க் ஜூக்கர்பர்க்!
- 'ண்ணோவ், என்ன உட்ருணா'... 'நேத்து நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல'... 'ஒருபுறம் Customer Care'... மறுபக்கம் ட்விட்டரில் கதறவிட்ட நெட்டிசன்கள்!
- '7 மணி' நேரம் முடங்கினதுக்கே இப்படியா...? ஓவர் நைட்ல மார்க்-க்கு விழுந்த பேரிடி...! வாட்ஸ் அப், பேஸ்புக்-கு என்ன தான் ஆச்சு...? - பலதடவ 'ஸ்விட்ச் ஆஃப்' செய்து ஆன் பண்ண மக்கள்...!
- சத்தியமா நீங்க 'இப்படி' பண்ணுவீங்கனு எதிர்பார்க்கல...! பொறுப்புள்ள 'பதவியில' இருக்குறவர் பண்ணுற 'வேலையா' இது...? - 'வாட்ஸ்அப்' பார்த்து அதிர்ந்துப் போன பெண் நிருபர்...!
- இனிமேல் யாராச்சும் 'தாலிபான்களுக்கு' சப்போர்ட் பண்ணி 'போஸ்ட்' போடுவீங்க...? 'என்ன ஏதுன்னு கேட்டுட்டு இருக்க மாட்டோம்...' - ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி...!
- தடுப்பூசி போட்டாச்சா..? அப்போ WhatsApp-லயே சர்டிபிகேட் டவுன்லோட் பண்ணிக்கலாம்.. ரொம்ப ‘ஈஸியான’ வழி..!