'பயத்துல' நடுங்கிட்டு இருந்தேன் மா...! 'ஃப்ளைட்ல இருந்து இறங்கி என் அம்மா ஓடி வந்தப்போ...' - உருக வைத்த அம்மாவின் பாசம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அங்கு வாழ பயந்து, பலரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மீட்பு விமானங்கள் மூலம் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பித்து சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்த கதிரா (56) என்ற பெண்மணி, தன்னுடைய மகள் மற்றும் மூன்று மகன்களுடன் மீட்பு விமானம் மூலம் காபூலில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்ற்யள்ளார். கதிராவின் மூத்த மகள் ஷகிபா தாவோத், பிரான்ஸ் நாட்டில் 12 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

பாரிஸ் ஏர்போர்ட்டில் 12 ஆண்டுகள் கழித்து தன்னுடைய அம்மாவை நேரில் பார்த்த ஷகிபா உணர்ச்சி வசப்பட்டார். கண்ணீரோடு ஆரத்தழுவி வரவேற்றது காண்போரை உருக வைத்தது. பல ஆண்டுகளுக்கு கழித்து, தனது அம்மா, சகோதரர்கள், சகோதரியை கண்டு உள்ளம் உருகிப் போனார் ஷகிபா தாவோத்.

இதுகுறித்து ஷகிபா தாவோத் கூறும்போது, ''இன்று என் வாழ்வில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டேன். என் அம்மா விமானத்தில் இருந்து இறங்கி என்னை நோக்கி ஓடி வருவதைப் பார்த்த நேரத்தில், எனது பயங்கள் அனைத்தும் பறந்து போய்விட்டன'' என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்