"இப்படி ஒரு காட்சியை..." "வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டீர்கள்..." 'கிரஹணத்தின்' திகைக்க வைக்கும் 'மற்றொரு காட்சி...!' 'வைரல் புகைப்படம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்சமீபத்தில் நிகழ்ந்த சூரிய கிரஹணத்தின்போது, பூமியின் மீது விழுந்த நிலவின் நிழலை, விண்வெளியிலிருந்து வீரர் ஒருவர், படம் பிடித்து அனுப்பியுள்ளார். இந்த அற்புதக் காட்சி காண்போரை திகைக்க வைத்துள்ளது.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும்போது, சூரிய கிரஹணம் ஏற்படுகிறது. கடந்த, 21ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரஹணத்தை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், விசேஷ கண்ணாடி அணிந்தும், தொலைநோக்கி வாயிலாகவும் கண்டு ரசித்தனர்.
பூமியிலிருந்து, சூரியனைப் பார்த்தபோது, நிலவால் மறைக்கப்பட்ட சூரியன், 'நெருப்பு வளையம்' போல காட்சி அளித்தது.
அதே நேரத்தில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பூமியைப் பார்த்தபோது, நிலவின் நிழல், பூமி மீது விழுந்தது. அதை கிறிஸ் காசிடி என்ற, 'நாசா' விண்வெளி வீரர், விண்வெளியிலிருந்து படம் பிடித்து தனது, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பூமியில் இருந்து வெகு தொலைவில் நிலவு இருந்ததால், அதன் நிழல் பூமியின் சிறிய பகுதியில் மட்டும் விழுந்ததை, நாசா வீரரின் புகைப்படம், தெளிவாக காட்டுகிறது. இதுவரை இப்படி ஒரு கோணத்தில் நிலவின் நிழலை யாரும் கண்டதில்லை. இந்த அற்புதக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாளை சூரிய கிரகணம் எப்போது தெரியும்'?... 'வெறும் கண்களால் பார்க்கலாமா'?... விஞ்ஞானிகள் தகவல்!
- 'நாளை' தோன்றும் 'சூரிய கிரகணத்தோடு...' 'கொரோனா' வைரஸ் 'செயலிழக்கும்...' 'எதிர்பார்ப்பை' ஏற்படுத்தும் 'ஆய்வாளரின் கூற்று...'
- அறிவார்ந்த '36 ஏலியன்' சமுதாயங்கள் ' உள்ளன...' 'நாட்டிங்ஹாம்' பல்கலைக்கழக 'விஞ்ஞானிகள்...' 'ஆஸ்ட்ரோஃபிசிகல் ஜர்னலில்' ஆய்வுக்கட்டுரை 'வெளியீடு...'
- “சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும்...” "வரும் சூரிய கிரகணம் நமக்குத் திருப்பு முனையாக அமையும்" 'சென்னை' விஞ்ஞானியின் 'சுவாரஸ்யத் தகவல்...!'
- 'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா!?'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்!.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா?.. வெளியான பரபரப்பு தகவல்!
- "புவி வெப்பம் அடைவதால் 2100ல் இந்த அபாயம் ஏற்படும்!" - ஜெர்மன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
- 'நிலவின் தெள்ளத் தெளிவான புகைப்படம்...' 'அமெரிக்க புகைப்படக் கலைஞர் சாதனை...' 'துல்லிய' புகைப்படம் என அங்கீகரித்த 'நாசா...'
- 'கொரோனா' கிருமிகளை அழிக்க 'நாசாவின்' புதிய 'தொழில்நுட்பம்...' 'வைரஸ்களை' முற்றிலும் 'அழிக்கும்' திறன் கொண்டது என 'விளக்கம்...'
- ‘9 மணிக்கு விளக்கு வச்சோம்’.. ‘அப்போ நிலாவை சுத்தி பெரிய வட்டம் தெரிஞ்சது’.. கோவையில் நடந்த அதிசயம்..! என்ன காரணம்..?
- 'பூமியை' நோக்கி வரும் 'சிறு கோள்'... இந்த தேதியில் உலகம் 'அழிந்து' விடுமா?... 'இணையத்தில்' வைரலாக பரவும் 'தகவல்'...