'தடுப்பூசி போட்டதும் நிமிடங்களில் ஏற்பட்ட'... 'தீவிர அலர்ஜியால் பரபரப்பு!!!'... 'இந்த பிரச்சனை இருக்கவங்க மட்டும்'... 'வெளியான முக்கிய எச்சரிக்கை!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பைசர் நிறுவன தடுப்பூசியால் அமெரிக்காவில் சுகாதார பணியாளர் ஒருவருக்கு தீவிர அலர்ஜி ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு, முன்னதாக பிரிட்டனும், பஹ்ரைனும் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து கனடா, அமெரிக்கா, குவைத், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் அனுமதி வழங்கியுள்ளன. இதையடுத்து அமெரிக்காவில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், சுகாதார பணியாளர் ஒருவருக்கு அந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டதும் ஒரு சில நிமிடங்களிலேயே கடும் அலர்ஜி ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சைக்கு பிறகு நன்றாக குணமடைந்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பே இங்கிலாந்து நாட்டில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு பிறகு இருவருக்கு அலர்ஜி அறிகுறிகள் தோன்றிய பின் அங்கு ஏற்கனவே அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள், உணவு மற்றும் மருந்துகளால் அலர்ஜிக்கு உள்ளாகுபவர்கள், பைசர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அலர்ஜி பாதிப்பு உள்ளவர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் எனவும், ஏற்கனவே வேறு தடுப்பூசியால் அலர்ஜிக்கு ஆளானவர்கள் மட்டும் பைசர் தடுப்பூசியை போட்டுகொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் தடுப்பூசிக்கு பிறகு அலர்ஜியால் பாதிக்கப்பட்டவருக்கு இதற்கு முன்பு அலர்ஜி ஏற்பட்டதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்