'Snacks பாக்கெட்குள் ஊசியை செலுத்திய நபர்'... 'அந்த ஊசிக்குள் இருந்த அருவருப்பான பொருள்'... அந்த சூப்பர் மார்க்கெட்ல வாங்குனதை தூக்கி போடுங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பல்பொருள் அங்காடிகள் சிலவற்றில் ஊசி மூலம் இளைஞர் ஒருவர் மர்மப்பொருளைச் செலுத்திய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

லண்டனில், புதன்கிழமை இரவு, பல்பொருள் அங்காடிகள் சிலவற்றில் ஊசி மூலம் உணவில் மர்மப்பொருள் ஒன்றை இளைஞர் ஒருவர் செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், அந்த இளைஞரைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கினார்கள்.

தற்போது அந்த இளைஞர் சிக்கிய நிலையில், அவர் ஊசி மூலம் என்ன செலுத்தினார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. அந்த இளைஞரின் புகைப்படம் வெளியான நிலையில், அந்த இளைஞர் சட்ட ஆலோசனை வழங்கும் ஆணையத்தில் பணியாற்றி வந்த விவரமும் தெரியவந்துள்ளது. பல்பொருள் அங்காடிக்கு வந்த இளைஞர், இறைச்சி மற்றும் சில தின்பண்டங்களில் ரத்தத்தைச் செலுத்தியுள்ளார்.

அந்த இளைஞர் செலுத்தியது மனித ரத்தமா அல்லது விலங்குகளின் ரத்தமா என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை. அந்த இளைஞர் ஏன் இப்படிச் செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சம்பவம் நடந்த நாளன்று Fulham Palace Road என்ற சாலையில் அமைந்திருக்கும் Tesco Express, Little Waitrose மற்றும் Sainsbury's Local ஆகிய பல்பொருள் அங்காடிகளில் மக்கள் வாங்கியிருந்தால் அவற்றை மக்கள் உபயோகிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் அவற்றில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்