டைவர்ஸ் கொடுத்த கோர்ட்.. 10 நாட்கள் மகன் மற்றும் மகளோட இருக்க ஆசைப்பட்டு விமானம் ஏறிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற தம்பதியும் இருந்ததாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீராங்கனைகள்.. வாழ்த்து சொல்லும் கிரிக்கெட் உலகம்..!

அதிர்ச்சி 

நேபாள நாட்டின் போகரா பகுதியில் இருந்து ஜோம்சோமுக்கு நேற்று காலை 9.55 மணிக்கு கிளம்பிய 9 NAET விமானம், சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதன் காரணமாக அச்சம் எழுந்த நிலையில், அந்த விமானம் விபத்தை சந்தித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள், மேலும், அந்நாட்டைச் சேர்ந்த 3 விமான குழு உறுப்பினர்கள் இருந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

முஸ்டாங் மாவட்டத்தில் தசாங்கின் சனோ ஸ்வேர் பீர் என்ற இடத்தில் 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த அசோக் குமார் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரித்திகா திரிபாதி மற்றும் வைபவி திரிபாதி ஆகியோர் பயணித்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோகம்

இதுகுறித்துப் பேசிய விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தியோ சந்திரசேகர் லால் கார்ன் "10 ராணுவ வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு ராணுவ விமானம் அனுப்பப்பட்டு,. தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். இந்நிலையில், இந்த விமானத்தில் மும்பையை சேர்ந்த தம்பதி ஒன்று பயணித்ததாக தற்போது காவல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள கபூர்பாவடி காவல்துறையின் மூத்த ஆய்வாளர் உத்தம் சோனாவனே இதுகுறித்துப் பேசுகையில்," அசோக் திரிபாதி (51) மற்றும் வைபவி பாண்டேகர் ஆகிய இருவரும் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இந்த தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருக்கிறது. இருப்பினும் தந்தை அசோக்குடன் ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் குழந்தைகள் இருக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதனால் தனது குழந்தைகளுடன் ஒன்றாக இருக்க ஆசைப்பட்ட அசோக் அவர்களை நேபாளத்தில் உள்ள முக்திதாமுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இவர்களுடன் வைபவியும் உடன் சென்றிருக்கிறார்" என்றார்.

இந்நிலையில், இந்த விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உட்பட அனைவரும் உயிரிழந்திருப்பதாக நேபாள ராணுவம் தற்போது அறிவித்திருக்கிறது. இதனால் அசோக் - வைபவி தம்பதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Also Read | UPSC 2021: இந்தியாவுலயே முதலிடம் பிடித்த மாணவி.. யார் இந்த ஸ்ருதி ஷர்மா?

NEPAL, NEPAL PLANE CRASH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்