Halloween : கொத்து கொத்தாக நடந்த சோகம்... மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிக்க முயன்ற நபர்.. பரபரப்பு நிமிடங்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென் கொரியா நாட்டில் ஹாலோவீன் திருவிழாவில், ஒரு லட்சத்திற்கும் மேலாக மக்கள் கூடி இருந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம், உலக அளவில் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இட்டவோன் என்னும் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆண்டு தோறும் ஹாலோவீன் திருவிழா நடந்து வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே வேளையில், கொரோனா தொற்று காரணமாக ஒரு சில ஆண்டுகள் இங்கே விழா நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில், கொரோனா தொற்று காலத்திற்கு பின்னர் முகக்கவசம் இன்றி ஹாலோவீன் திருவிழாவில் கூடலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் ஏரளமான மக்கள் கூடி இருந்தனர்.

இதனிடையே, ஹாலோவீன் திருவிழாவை கொண்டாட ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்த இடத்தில் கூடி உள்ளனர். சிறிய சாலை உள்ள பகுதியில் இத்தனை மக்கள் கூடியதன் காரணமாக அங்கே கடுமையான நெரிசலும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் நசுங்கி போனதாகவும், சிலர் மூச்சு விட திணறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி பலரும் இந்த ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி உயிரிழந்தும் போயினர்.

அது மட்டுமில்லாமல், இந்த நெரிசல் காரணமாக பலருக்கும் மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் , சுமார் 150 பேருக்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். இப்படி மாரடைப்பு ஏற்பட்ட பல நபர்களுக்கு சாலை ஓரத்தில் CPR கொடுக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், பலரையும் பீதியில் உறைய வைத்திருந்தது.

அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், இன்னும் உயிரிழப்புகள் அதிகமாகும் என்றே கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், கூட்ட நெரிசலில் சிக்கிய நபர் ஒருவர் அங்கிருந்து தப்பித்து கட்டிடத்தின் மேலே ஏறிச் செல்லும் வீடியோ ஒன்றும் அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

மக்களின் கூக்குரல் கேட்டுக் கொண்டிருக்க, யாருக்கும் அசைய முடியாத அளவுக்கு நெரிசல் அங்கே உள்ளது. அதில் இருந்து ஒருவர் தனது உயிரை காத்துக் கொள்ள மேலே ஏறி செல்கிறார். இந்த வீடியோவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

SEOUL, HALLOWEEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்