நெஞ்சை பிடிச்சுகிட்டு உக்கார்ந்த இளைஞர்.. உக்ரைனில் இரண்டாவது இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் உக்ரைனின் வரலாற்றையே மாற்றி எழுதிக்கொண்டு இருக்கிறது. கடல், வான், தரை என உக்ரைனை கடுமையாக தாக்கி வருகிறது ரஷ்யா.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்றுவரும் இந்திய மாணவர்களின் நிலை குறித்து அச்சம் நிலவிவருகிறது. அந்நாட்டின் பெரிய நகரமான கார்க்கிவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த 21 வயது மாணவர் உயிரிழந்த நிலையில் தற்போது பஞ்சாபை சேர்ந்த மாணவர் ஒருவரும் நேற்று மரணம் அடைந்து இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பின் பர்னாலா பகுதியை சேர்ந்த சந்தன் ஜிண்டால் (22), உக்ரைனில் உள்ள வின்னிட்சியா நேஷனல் பைரோகோவ் மெமோரியல் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
ஸ்ட்ரோக்
இந்நிலையில், நேற்று சந்தன் ஜிண்டாலுக்கு மூளையில் ஸ்ட்ரோக் ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து அவர் வின்னிட்சியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றே மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
சந்தன் ஜிண்டாலின் பெற்றோரும் உக்ரைனிலேயே இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய வெளியுறவு துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி," உக்ரைனில் இரண்டாவது இந்திய மாணவர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்திருக்கிறார். அவரது பெற்றோரும் உக்ரைனிலேயே வசிக்கின்றனர்" என்கிறார்.
கோரிக்கை
இந்நிலையில், தனது மகனின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் சந்தன் ஜிண்டாலின் தந்தை. இதே போல, கடந்த மார்ச் 1 ஆம் தேதி, ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் மரணமடைந்த நவீன் என்னும் மாணவரின் உடலையும் இந்தியா கொண்டுவர அவரது தந்தை கோரிக்கை வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உக்ரைன் அதிபருக்கு ஸ்கெட்ச் போட்ட ரஷ்யா.. "முக்கிய டீமை உள்ள இறக்கிடுச்சு".. அதிகாரிகள் சொன்ன அதிரவைக்கும் செய்தி..!
- "என்னால முடியல மா, பயமா இருக்கு.." இறப்பதற்கு முன் ரஷ்ய வீரர் அனுப்பிய மெசேஜ்.. உருக வைக்கும் தாயின் நிலை
- "நாட்டுக்காக ஆயுதம் ஏந்தினேனா? போஸ் இதுக்கு தான் கொடுத்தேன்"! மிஸ் உக்ரைன் விளக்கம்!
- “சாப்டுட்டு கால் பண்றேன்னு சொன்னான்.. ஆனா”.. உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை உருக்கம்..!
- Russia – Ukraine Crisis: "உக்ரைனுக்கு துணை நிற்போம்".. ஆப்பிள் நிறுவனம் எடுத்த பரபரப்பு முடிவு..
- உக்ரைன் எல்லையில்..60 கிலோமீட்டர் நீள ரஷ்ய படை...பதறவைக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள்..!
- உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர்.. கடைசியா அப்பா கிட்ட வீடியோ கால்ல பேசியிருக்காரு.. நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!
- மளிகைப்பொருள் வாங்க நின்னுட்டு இருந்தப்போ...! உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது எப்படி..? நண்பர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
- மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்.. கணவர் இன்னொரு நாட்டில் பணய கைதி.. புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்
- "உடனே உங்க வீட்டுக்கு மேல எதாவது மார்க் இருக்கானு பாருங்க.. எச்சரிக்கும் உக்ரைன் அரசு..ரஷ்யாவின் மாஸ்டர் பிளானா?