'வாக்கிங் போன மனுஷன்'... 'பேராசிரியருக்கு என்ன நடந்தது'?... 'விலகுமா மர்மம்'... அதிர்ச்சியில் குடும்பத்தார்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காணாமல் போன பேராசிரியரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பணியாற்றி வருபவர் 33 வயதான சாம் துபல். இவர் மோவிச் ஏரி டிரெயில்ஹெட்டில் இருந்து மதர் மவுண்டன் லூப் பகுதிக்கு அக்டோபர் 9 ஆம் தேதி சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்து அக்டோபர் 12 ஆம் தேதி வெளியேறிய அவர், எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது. இதையடுத்து வாஷிங்டன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் பல குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே துபேலின் காரை தேடுதல் குழு கண்டுபிடித்துள்ளதாக துபேலின் சகோதரி வீணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''துபல் கடந்த 9-ம் தேதி இரவு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இப்ஸூட் க்ரீக் மற்றும் சியாட்டில் பூங்காவில் இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அந்த பகுதியில் யாராவது நடைபயிற்சி மேற்கொண்டால் தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள். இது குறித்து தகவலை அனுப்புங்கள்'' என கூறியுள்ளார்.

பேராசிரியர் திடீரென மாயமானது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. இதற்கிடையே துபல் கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் பல்கலைக்கழக மானுடவியல் துறையில் உதவி பேராசிரியராக சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்