கடலுக்கெல்லாம் கூடவா 'சளி' பிடிக்கும்...?! 'இது சும்மா கடந்து போற விஷயம் கிடையாது...' இதனால மனுஷங்களுக்கும் 'அந்த' ஆபத்து வரலாம்...! - கடும் 'எச்சரிக்கை' விடுக்கும் விஞ்ஞானிகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்நம் உடலின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பதனால் பெரும்பாலும் சளி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மேலும் கூறுகையில், சளி தோன்றுவது, உடல் சூடு அதிகரிப்பின் வெளிப்பாடு. நம் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை உடல் வெப்பமே அளிக்கிறது.
நம் உடலைப் போலத்தான் பூமியும் உள்ளது. அதிலும் சுமார் 71 விழுக்காடு கடலினால் ஆனது. அதாவது நான்கில் மூன்று பங்கு. இது புவியிலுள்ள 96.5 விழுக்காடு நீரைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பொழுது உயிரினங்களின் உடல் சூட்டையும் புவி வெப்பமயமாதலையும் பொருத்திப் பார்க்க வேண்டும். ஆம், புவி வெப்பமானால் பெருங்கடல் நீர் சூடாகி பாசி போன்ற நுண்தாவரங்களுக்கு ஊட்டமளிப்பதால்தான் கடல் சளி ஏற்படுகிறது.
பச்சை - சாம்பல் வண்ணமுடைய கோழை போன்ற கரிமப் பொருளான இந்த கடல் சளி, பல்கிப் பெருகி கடலின் மேற்பரப்பை அடைத்துக்கொள்வதுடன், கடலின் அடிப்பகுதியை நோக்கியும் சில அடி முதல் பல கிலோ மீட்டர்வரை அடர்த்தியாக வளரும் திறன் கொண்டது. இந்தக் கூழை படலத்தினால் ஆபத்தில்லையென்றாலும்கூட வைரஸ், பாக்டீரியா போன்ற பல ஆபத்தான நுண்ணுயிர்களைக் கவர்ந்து அவற்றின் கூடாரமாக இது கடலில் மிதக்கிறது, என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்படிக் கடலின் மேற்பரப்பை அடைத்து வளரும் சளியினால் கடலில் உள்ளே செல்லும் ஆக்சிஜன் தடுக்கப்பட்டு, கடலின் வெப்பநிலை கூடுகிறது.
மனிதர்களைப் போல் ஆக்சிஜன் படுக்கை கேட்க முடியாத கடல்வாழ் உயிர்கள் மடிந்துவிடுகின்றன. இவ்வாறு செத்து மிதக்கும் சடலங்களால், கடலின் சூழ்நிலை மேலும் சீர்கெடுகிறது.
மீன் வளம் குறைவதால் அதனைச் சார்ந்து வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இப்படிச் சூழலியல் சீர்கேட்டினால் மனிதர்களுக்கும் சில தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். இது மனித குலத்துக்கே பேராபத்தாக முடியும். ஏற்கனவே கொரோனா வைரஸ் மூலம் உலகம் முழுவதும் 37 லட்சம் மனிதர்கள் மரணித்துள்ளனர்.
இந்த கடல் சளி நீர்நிலைகளில் நிகழும் அரிதான நிகழ்வுதான் எனினும், துருக்கியில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை அப்படிப்பட்டது இல்லை. கருங்கடலையும், ஏஜியன் கடலையும் இணைக்கும் மர்மரா கடல்பகுதிதான் கடல் சளி எனும் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தத் தொற்றானது கடந்த காலத்தைவிட அதிகமாக இருப்பதால், இதைக் கடல் சளி பெருவெடிப்பு என்றே கூறுகின்றனர்.
கடலில் மிக அதிக அளவில் கலக்கப்படும் கழிவுகளால் மாசுபாடு அடைந்த கடல் நீர், காலநிலை மாற்றத்தோடு கைகோத்து இந்தப் பெருவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தா மறுபடியும் வந்திடுச்சுல...' ஆனா இந்த தடவ அதுல 'ஒரு வாசகம்' எழுதியிருக்கு...! - மீண்டும் தோன்றிய மர்ம தூண்...!
- 'பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட பெண்கள்... 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகள்... ஒரே ஆள்... ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த கதை!!!
- Video: ‘உல்லாச குளியல்.. எனக்கே சொந்தம்!’.. ‘அடேயப்பா என்ன ஒரு ஆனந்தம்!’.. ‘பரபரப்பு’ காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘ஊழியர்!’ .. ‘தெறிக்க விடும்’ வீடியோ!
- BIG BREAKING :'துருக்கியில் அதிபயங்கர நிலநடுக்கம்...' 'அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து சரிந்தன...' - கடல்நீர் ஊருக்குள் புகுந்தது...!
- VIDEO: 'விடிய விடிய நடக்கும் கோர தாக்குதல்'!.. அர்மீனியா - அசர்பைஜான் மோதல் போராக மாறியது!.. பதறவைக்கும் காட்சிகள்!.. பின்னணி என்ன?
- 'சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள்'... 'திடீரென வெடித்துச் சிதறிய லாரி'... '11 குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோருக்கு நடந்த பரிதாபம்'!
- ‘கொரோனாவுக்கு எதிராகப் போராடும் தாய்’... 'ஒரு மாதம் கழித்து’... ‘தற்செயலாக பார்த்த மகள்’... ‘அழுதுக் கொண்டே நடத்திய பாசப் போராட்டம்’!
- WATCH VIDEO : ‘ஆயில் கிணற்றுக்குள் மாட்டிக்கொண்டு’... ‘தவித்துப்போன நாய்க்குட்டியை’... ‘உயிரை துச்சமாக மதித்து மீட்ட சிறுவன்’... ‘நெகிழ வைத்த சம்பவம்’!
- VIDEO: பீட்சா டெலிவரி பாய் செய்ற வேலையா இது?.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா.. பகீர் வீடியோ..!
- தரையிறங்கிய போது 'இரண்டாக உடைந்த விமானம்'... விமானத்தின் உள்ளே '177 பயணிகள்'... இணையத்தில் வெளியான வைரல் வீடியோ...