"புவி வெப்பம் அடைவதால் 2100ல் இந்த அபாயம் ஏற்படும்!" - ஜெர்மன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புவி வெப்பமடைவதால் 2100 ஆம் ஆண்டு ஒரு மீட்டருக்கு மேல் கடல் மட்டம் உயரக் கூடும் என்று ஜெர்மனியிலுள்ள பருவநிலை தாக்க ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள பருவநிலை தாக்க ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் புவி வெப்பமடைதல் குறித்த விரிவான ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகளின்படி 2100 ஆம் ஆண்டு இப்போது உள்ளதைவிட மூன்றரை டிகிரி செல்சியஸ் புவியின் வெப்பநிலை அதிகரிக்கக் கூடுமென்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு புவியின் வெப்பநிலை அதிகரிப்பதன் விளைவாக கடலின் மட்டமானது 130 சென்டி மீட்டர் அதாவது 1.3 மீட்டர் உயர்ந்து விடும் என்றும் எச்சரித்துக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் 2300ஆம் ஆண்டில் அண்டார்டிகா, கிரீன்லாந்து உள்ளிட்டவற்றின் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் 5 மீட்டர் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி 77 கோடி பேர், அதாவது உலக மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் கடலின் அலை மட்டத்திற்கு மேல் 5 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள பகுதிகளில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்