'வாழ்த்துக்கள்ங்க!'... கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, டிரம்ப் நியமித்த முக்கிய ‘பொறுப்பில் இருந்த’ அதிகாரி ‘எடுத்த’ முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான தனது சிறப்பு ஆலோசகராக, டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணரான ஸ்காட் அட்லாஸ் என்பவரை நியமித்தார். ஆனால், கொரோனா தொடர்பான ஆலோசகராக, பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோயியலில் முறையான அனுபவம் இல்லாத ஸ்காட் அட்லாசை நியமித்ததாக டிரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்தன.

அத்துடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம் அணிதல் மற்றும் ஊரடங்கை அமல்படுத்துதல் ஆகியவற்றை ஸ்காட் அட்லாஸ் கடுமையாக எதிர்த்தார். இதனை அடுத்து கொரோனா வைரஸ் விவகாரத்தில் டிரம்பை ஸ்காட் அட்லாஸ் தவறான பாதையில் வழி நடத்துவதாக கண்டனங்கள் வலுத்தன. இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை அடுத்து, வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கிறார்.

இந்த நிலையில் ஸ்காட் அட்லாஸ் தமது, டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.  ஸ்காட் அட்லாஸ் ட்விட்டரில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளதுடன், ஜோ பைடன் உருவாக்கிய புதிய கொரோனா தடுப்பு குழுவுக்கு தம் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்