கணவருக்கு இருந்த நோய்.. எந்த Test'ம் பண்ணாம கண்டுபிடித்த மனைவி.. "எப்படின்னு தெரிஞ்சு ஒட்டுமொத்த மருத்துவர்களும் திகைச்சு போய்ட்டாங்க"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, ஒரு நபருக்கு ஏதாவது அரிய நோய் தென்பட்டால், அதனை ஸ்கேன் செய்தோ அல்லது மருத்துவமனைக்கும் கொண்டு சென்றோ தான் உறுதி செய்வார்கள்.

Advertising
>
Advertising

Also Read | இளம்பெண்ணுக்கு பிறந்த அச்சு அசல் ட்வின்ஸ்.. 2 குழந்தைக்கும் வேற வேற அப்பா.!. வியப்பில் ஆழ்ந்த மருத்துவர்கள்!!

அதே வேளையில், இன்னும் சில அரிய நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டால் கூட அதனை கண்டுபிடிப்பது என்பது அரிதான ஒன்றாக தான் இருக்கும்.

ஆனால், பெண் ஒருவர் தனது கணவருக்கும் இருந்த நோய் தொடர்பாக மிகவும் வினோதமான முறையில் கண்டுபிடித்த விஷயம், பலரையும் மிரள வைத்துள்ளது.

Parkinson's நோய் என்பது, ஒருவரின் உடலில் நாளடைவில் கடுமை மிகுந்து தசைத் தளர்ச்சியும், கை கால் நடுக்கமும் என உடலையே ஒரு கட்டுப்பாடு இல்லாமல் உருவாக்கும் நோய் வகை ஆகும். இந்த நோயை கண்டுபிடிப்பது என்பது ஏதாவது அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ள முடியாது என்பது தான் இத்தனை நாள் வரைக்கும் இருந்து வந்துள்ளது.

ஆனால், ஸ்கட்லாந்தின் பெர்த் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், வாசனை கொண்டு Parkinson's நோய் இருப்பதை கண்டறிவதாக தெரிவித்துள்ள விஷயம், மருத்துவர்கள் பலரையும் திகைக்க வைத்துள்ளது. ஜாய் மில்னே என்ற அந்த பெண், அதிக உணர்திறன் கொண்ட வாசனையை கொண்டு யார் எல்லாம் Parkinson's நோய் மூலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டுபிடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இந்த நோய் மெதுவாக வெளிப்படும் நிலையில், இறுதியில் நாட்கள் செல்ல செல்ல மிகவும் மோசமான ஒரு நிலையையும் உருவாக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. பார்கின்சன் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், வாசனை மூலம் ஒருவர் இந்த நோயைக் கண்டறிவது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

முன்னதாக, ஜாய் மில்னேவின் கணவர் பார்கின்சன் நோய் மூலம் பாத்திக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இது அவருக்கு தெரியாமல் இருந்த நிலையில், அவரது உடலில் ஒருவித வித்தியாசமான வாசனை உருவாவதை ஜாய் மில்னே உணர்ந்துள்ளார். அவ்வப்போது தோன்றி மறையும் இந்த வாசனையை ஜாய் உணர்ந்த நிலையில், அவரது கணவருக்கு பார்கின்சன் நோய் இருப்பது 12 ஆண்டுகளுக்கு பின்னர் தான் தெரிய வந்துள்ளது.

வாசனை மூலம் பார்கின்சன் நோயை கண்டறிய முடியும் என்பதை ஜாய் மில்னே உணர்த்தி உள்ளதால், அவரை வைத்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்த நோயை அறிந்து கொள்ள புது சோதனை முறை ஒன்றையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "கார் காணாம போனது லண்டன்'ல.. கெடச்சது பாகிஸ்தான்'ல.." உலகளவில் அதிர வைத்த சம்பவம்!!.. எப்படி நடந்தது??

SCOTLAND, WOMAN, HUSBAND, DISEASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்