'வருசத்துக்கு 38 லட்சம் ரூபாய் சம்பளம்...' 'இப்படி ஒரு வேலை உலகத்துல எங்கையுமே கிடைக்காது...' - இத தவிர லாபத்துல பங்கு, போனஸ், 35 நாள் லீவு வேற...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்காட்லாந்தின் பார்டர் பிஸ்கட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது உலகெங்கும் வைரலாகி வருகிறது.

பார்டர் பிஸ்கட்ஸ் நிறுவனம் தங்களுடைய நுகர்வோருக்கு மிகவும் உயர்தர மற்றும் சுவையான பிஸ்கட்டுகளை உற்பத்தி செய்து தரவேண்டும் என்பதையே தங்களின் தாரக மந்திரமாக கொண்டுள்ளதால் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.

பார்டர் பிஸ்கட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் உயர்தர சுவையான பிஸ்கட்டுகளை தினமும் சாப்பிட ஒருவரை பணி நியமனம் செய்ய உள்ளதாகவும், அவர்களுக்கு ஆண்டுக்கு 40,000 பவுண்ட் (38 லட்சம் ரூபாய்க்கு மேல்) சம்பளம் வழங்கப்படும் எனவும் அதோடு ஆண்டுக்கு 35 நாட்கள் விடுமுறையும், வாபத்தில் பங்கு, போனஸ் திட்டம், ஷாப்பிங் சலுகைகள், இலவச ஆன்லைன் பயிற்சிகள் ஆகியவையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிய வாய்ப்புகளை வழங்கும் பார்டர் பிஸ்கட்ஸ் என்ற நிறுவனம் Master Biscuitier என்ற இந்த பதவிக்கு கல்வித் தகுதியும் அவசியம். உணவு அறிவியல், ஊட்டச்சத்து போன்ற உணவு சார்ந்த துறைகளில் டிப்ளமா/டிகிரி முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். உணவுசார்ந்த துறையில், முக்கியமாக பேக்கரி அல்லது இனிப்பு உணவுகளில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்