'பாஸ், இப்போ உங்க எல்லாருக்கும் நான் தான் சீனியர்'... 'புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் உணவு முறை'... ஆச்சரிய தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆய்வாளர்கள் கூப்பர் என்ற புதிய டைனோசர் இனம் ஒன்றை அடையாளம் கண்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவில் கடந்த பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் கால்நடை பண்ணை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் அது கூப்பர் என்ற புதிய டைனோசர் இனம் என அடையாளம் கண்டுள்ளனர். பூமியிலேயே பெரிய டைனோசர்களில் இந்த இனமும் ஒன்று எனத் தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

கிரீத்தேசியக் காலத்தில் இந்த டைனோசர் வாழ்ந்து உள்ளதாகத் தெரிகிறது. அப்போது ஆஸ்திரேலியா அண்டார்டிக்காவுடன் இணைந்த பகுதியாக இருந்துள்ளது. இந்த டைனோசரின் உணவு முறை குறித்துப் பேசிய ஆய்வாளர்கள், தாவரங்களை மட்டுமே உண்டு வாழ்கின்ற Sauropod வகையைச் சேர்ந்தது எனக் கூறியுள்ளார்கள்.

இந்த வகை டைனோசர்கள் மிகவும் பெரிய உருவ அமைப்பைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் பூமியிலேயே மிகப் பெரியதாகக் கூட இருந்திருக்கலாம் என இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாஸ்கெட் பால் கோர்ட் அளவில் இதன் நீளமும் (25 முதல் 30 மீட்டர் நீளம்), இரண்டு மாடி அளவிற்கு இது உயரமானதாகவும் இருந்திருக்கும் என அதன் எலும்புகளை அத்தாட்சியாக வைத்து ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் எலும்புகளை அருங்காட்சியகம் ஒன்றில் சேகரித்து வைத்துள்ளனர். தற்போது அதனை முப்பரிமாண முறையில் ஸ்கேன் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த டைனோசரின் எலும்புகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் மேலும் பல எலும்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு பகுதிகளும் நடந்து வருகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்