Zombie Virus : 48,500 ஆண்டுகள் உறைந்து போயிருந்த ஜாம்பி வைரஸ்??.. புத்துயிர் அளித்த விஞ்ஞானிகள்??.. உலக அளவில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நாட்டில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பாடு படுத்தி விட்டது.

Advertising
>
Advertising

Also Read | திருமண நிகழ்ச்சியில்.. உற்சாகமா ஆடிட்டு இருந்த மனுஷன்.. ஒரு செகண்ட்ல நடந்த விபரீத சம்பவம்.. பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!

அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி உலகின் அனைத்து நாடுகளுக்கு கொரோனா பிடியில் சிக்கித் தவித்தது. பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் நெருக்கடி கண்டதால், மக்களும் கதிகலங்கி போயினர்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று தாண்டவம் ஆடி இருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கும் மக்கள் திரும்பி வருகின்றனர். ஆனால், அதே வேளையில் உலகின் மற்ற பல்வேறு வகையான வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சுமார் 48,000 ஆண்டுகளுக்கு உறைந்து போயிருந்த வைரஸ் குறித்து தெரிய வந்துள்ள தகவல், பலரையும் பீதியில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஒரு இடத்தில், பனியில் உறைந்து போய் இருந்த சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதனை ஆய்வாளர்கள் புத்துயிர் அளித்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், பல்வேறு வைரஸ்களை கண்டறிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும், சுமார் 48,500 ஆண்டுகளாக புதைந்திருந்த வைரஸ் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக உறைந்து இருந்த போதும் அது இன்னும் கூட தொற்றை பரப்பும் குணத்தை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், அதே வேளையில், இந்த வைரஸ் பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளை பாதிக்கும் திறன் கொண்டதாக உள்ளன என்றும் மனிதர்களை தாக்கும் ஆபத்து சற்று குறைவாகவே உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது ஜாம்பி வைரஸ் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விலங்குகள் அல்லது மனிதர்களை தாக்கும் ஏதாவது வைரஸ், பனிப்பாறை உருகுவதால் மீண்டும் புத்துயிர் பெற்றால் பாதிப்பை தரும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பனிப்பாறை உருகுவதால், பல நூறு ஆண்டுகளாக புதைந்து கிடைக்கும் வைரஸ்கள் மீண்டும் புத்துயிர் பெறலாம் என்றும், அவை மனிதர்கள் மத்தியில் எவ்வளவு வேகமாக பரவும் என்பது குறித்தும் தற்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் சொல்லப்படுகிறது.

பருவ நிலை மாற்றம் குறித்த பேச்சு உலகளவில் அதிகம் பேசப்பட்டு வரக் கூடிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், தற்போது இப்படி ஒரு வைரஸ் குறித்து வெளியாகி உள்ள தகவல், உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "இதுக்கு மேலயும் சரிப்பட்டு வராது".. சண்டை போட்டு தாய் வீட்டுக்கு போன மனைவியை கூப்பிட போன கணவர் .. கூடவே போட்டு வெச்ச அதிர்ச்சி பிளான்?!

SCIENTISTS, ZOMBIE, RUSSIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்