கடல் ஆழத்துல இருக்கும் துளைகள்.. "இது எப்படி உருவாகுதுன்னு எங்களுக்கே தெரில.. ஆனா அடிக்கடி நடக்குது"..பொதுமக்கள் கிட்ட HELP கேட்ட ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் மர்ம துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இவை எப்படி உருவாகிறது என்பது தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read | வீட்டு வாசல்ல கிடந்த வயர்.. எடுக்கப்போன அப்பா... மகன் கண்முன்னாடியே நடந்த துயரம்..!
கடல்
ஆதிகாலம் தொட்டே மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் ஆச்சர்யமாக விளங்கிவருகிறது கடல். உலகத்தின் பல நாடுகளும் கடல்வழி பயணத்தின் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் கடல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் கடலே இருந்தாலும் அதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒவ்வொரு நாளும் கடல் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளிவந்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில் உலக பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சீரான துளைகள் ஆராய்ச்சியாளர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆராய்ச்சி
தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration) அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ் அருகே நீருக்கு அடியில் இருக்கும் எரிமலைப்பகுதியை ஆராய்ந்து வருகிறது இந்த அமைப்பு. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வின் போது 3 கிலோமீட்டர் ஆழத்தில் கடலின் தரைப்பரப்பில் மர்ம துளைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர் இந்த குழுவினர்.
இந்த துளைகள் சீராகவும், ஒரே நேர்க்கோட்டிலும் அமைந்திருப்பது இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது முதல்முறை அல்ல எனவும் இதற்கு முன்னரே இப்படியான துளைகள் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களுக்கே தெரில
இதுகுறித்து தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் பகிர்ந்துள்ள அறிக்கையில்,"சனிக்கிழமை அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் சீரான துளைகளை கண்டறிந்தோம். இதேபோல துளைகள் இதற்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவற்றின் தோற்றம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இவை ஏறக்குறைய மனிதனால் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் துளைகளைச் சுற்றியிருக்கும் சிறிய வண்டல் குவியல்கள், ஏதோவொன்றால் தோண்டியெடுக்கப்பட்டவை போல காட்சியளிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த பதிவில் இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் பொதுமக்கள் இதுபற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ஆரம்பத்துல கேமரால ஏதோ கோளாறுன்னு நெனச்சோம், ஆனா..!” உறைபனிக்கு அடியில் அதிசயம்.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்..!
- விண்வெளியில் 'உடலுறவு' வச்சிக்க முடியுமா...? 'ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு...' - 'ஷாக்' தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்...!
- வௌவ்வாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!
- 'கொரோனா முதல்முதலா உருவானதே இந்தியாவுல தானா???'... 'பகீர் கதையைக் கூறி'... 'பரபரப்பை கிளப்பியுள்ள சீன ஆய்வாளர்கள்!!!'...
- 'வயசு ஆகாம இளமையாவே இருந்துட்டா எப்படி இருக்கும்?'.. முதுமையைக் கட்டிப்போடும் கண்டுபிடிப்பு!.. விஞ்ஞானிகள் சாதனை!.. பின்னோக்கி செல்கிறது வயது!!
- இன்னும் இந்த ‘வருஷம்’ என்னவெல்லாம் பார்க்க போறோமோ.. மரப்பொந்தில் இருந்து வெளியே வந்த ‘விஷ வண்டு’ கூட்டம்.. வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்..!
- "ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல..." இந்தியாவுல '198 வகை' 'கொரோனா வைரஸ்' இருக்காம்... அதுல நம்மை 'பொரட்டி' எடுக்குறது '2 வகைதானாம்...'
- கொரோனாவின் சித்து விளையாட்டை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள்!.. தடுப்பூசிகளுக்கு அடங்காமல் இருப்பது ஏன்?.. வெளியான பரபரப்பு தகவல்!
- ‘டைனோசர்’ காலத்தில் வளர்ந்த மரம்.. பாறைக்கு நடுவே கிடைத்த ‘புதைப்படிவம்’.. ஆச்சரியத்தில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்..!
- 'கொரோனா - சீனாவின் உயிரியல் ஆயுதமா? (Bio weapon) அல்லது இயற்கை வைரஸா?'... உண்மையைப் போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!