என்னங்க சொல்றீங்க...! வேஸ்ட் பிளாஸ்டிக் வச்சு 'இப்படி' ஒரு கண்டுபிடிப்பா...? - அசத்திய எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் அதன் கழிவுகளை அழிப்பது தலை சுற்ற வைக்கும் செயலாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுசூழல் திட்ட குழு வெளியிட்ட ஒரு குறிப்பில், உலகம் முழுவதும் 1 நிமிடத்திற்கு சுமார் 10 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் 14% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் மீதி பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகளாக கொட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் தலை சுற்ற வைப்பதுடன், தற்போது வரை பிளாஸ்டிக்கை மக்கிப்போக செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறியவும் உலக விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் தீர்வு எட்டியபாடாக இல்லை.
இந்நிலையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எடின்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிர் தொழில்நுட்பவியல் விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியா மூலம் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை கொண்டு வெனிலா சாறு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி குறித்து அவர்கள் வெளியிட்டு இருக்கும் ஆய்வு கட்டுரையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட இ - கோலி பாக்டீரியாவானது பிளாஸ்டிக் பாட்டில்களில் காணப்படும் முக்கிய வேதிப் பொருட்களான தெரப்தாலிக் அமில மூலக்கூறில் சிறிய மாற்றம் செய்து அதனை வெனிலின் எனப்படும் வேதிப் பொருட்களாக மாற்றும் திறன் உடையது.
இந்த வெனிலின் வேதிப் பொருளானது வெனிலா எஸ்ட்ராக்ட் எனப்படும் வெனிலா சாறு தயாரிக்க பயன்படும் முக்கிய வேதிப் பொருள் ஆகும். தற்போது வரை இந்த வெனிலா சாறு வெனிலா பீன்ஸ் எனப்படும் தாவரத்தில் இருந்துதான் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெனிலா சாறு கேக், ஐஸ்க்ரீம், அழகு சாதனங்கள், மருந்துகள் மற்றும் பல வாசனை திரவியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதய கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் மூலமாக பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை பெருமளவு குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '1 KG வேஸ்ட் பிளாஸ்டிக் கொடுத்திட்டு...' இலவசமா 'இத' வாங்கிட்டு போங்க...! - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டெல்லி மாநகராட்சியின் GARBAGE CAFE...!
- "இப்போ எப்படி வந்து தாக்குதுன்னு பாக்குறேன்..." "கொரோனான்னா என்ன பெரிய கொம்பா.... யாருகிட்ட... " பாதுகாப்புக்காக 'விமானப்பயணிகள்' செய்த 'விநோத' செயல்... 'வைரல் வீடியோ...
- பாம்பின் வயிற்றிற்குள் 'பிளாஸ்டிக்' பாட்டில்... உயிர்போகும் வேதனையில் 'தவிப்பு'... படாத பாடு பட்டு வெளியே கக்கிய 'நேரடிக் காட்சி'...
- ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 52 கிலோ’.. ‘பசுவின் வயிற்றில் ஆப்ரேஷன்’.. சென்னையில் பரபரப்பு..!
- ‘நாமதான் நாட்டுக்கே முன் உதாரணமா இருக்கணும்’.. ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..!
- ‘காலி ப்ளாஸ்டிக் பாட்டிலுக்கு காசு’.. ‘அறிமுகமான புது கேஸ்பேக் திட்டம்’.. அசத்திய மாவட்ட ஆட்சியர்..!
- இனி ரயில்வே ஸ்டேஷன்ல இத யூஸ் பண்ண தடை..! அரசின் அடுத்த அதிரடி..!
- ‘ரயில்நிலையங்களில் இனி இதை’... ‘பயன்படுத்த முடியாது’... மத்திய அரசு அதிரடி!
- 'லாங்ல பாத்தாதான் இரும்புக் கம்பேனி'.. உள்ள போனா நடக்குறதே வேற.. சென்னையை அதிர வைத்த நிறுவனம்!
- '2 பெண்கள் உட்பட 4 அதிகாரிகள்’.. 'இப்படியா பண்ணுவீங்க'.. பதற வைத்த சம்பவம்!