இறக்கை மட்டுமே 30 அடி.. "உலகத்தின் முதல் பறவை அதுதானா?".. ஆய்வாளர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அர்ஜென்டினாவில் மிகப்பெரிய பறவை ஒன்றின் படிமங்களை அந்நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகின் முதல் பறவை
86 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த "டெத் ஆஃப் டிராகன்" என்னும் பிரம்மாண்ட பறவையின் எலும்புகளை கண்டறிந்துள்ளனர் அர்ஜென்டினாவை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். ஊர்வன வகையை சேர்ந்த இந்த பறவைகளின் இறக்கை 30 அடி இருந்திருக்கலாம் எனக்கூறும் ஆய்வாளர்கள், 9 மீட்டர் நீளம்கொண்ட இந்த உயிரினம் உலகின் முதல் பறவை இனமாக இருக்கக்கூடும் என்கிறார்கள். மேலும், இவை டைனோசர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
புதிய மைல்கல்
அர்ஜென்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள வடக்கு மெண்டோசா மாகாணத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இந்த உயிரினத்தின் எலும்புகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள பாறைகளுக்கு நடுவே ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அவை கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிஸ் மலைத்தொடரில் Thanatosdrakon பகுதியில் இந்த ஆராய்ச்சியில் இறங்கிய குழுவின் தலைவர் லியனார்டோ ஆரிட்ஸ் இதுபற்றிப் பேசுகையில்,"இது வரலாற்றின் முக்கிய மைல்கல் ஆகும். இதுபோன்ற ஒன்றை நாங்கள் கண்டதில்லை. கிரேக்க மொழியில் Thanatos என்பதற்கு இறப்பு (death) என்று பொருள். டிராகனை கிரேக்கர்கள் drakon என்று அழைத்திருக்கின்றனர். ஆகவே இந்த பறவைக்கு dragon of death எனப் பெயரிடப்பட்டுள்ளது" என்றார்.
மிகப்பெரிய உயிரினம்
கிரெட்டேசியஸ் ரிசர்ச் என்ற அறிவியல் இதழில் கடந்த ஏப்ரலில் தங்கள் ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள், "தென் அமெரிக்காவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய புதைபடிவ எலும்புக்கூடுகள் இவை. இதுபோன்ற உடலமைப்பை கொண்ட உயிரினங்கள் எந்த உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற தரவுகள் தற்போது எங்களிடத்தில் இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அர்ஜென்டினாவில் 86 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பிரம்மாண்ட உயிரினத்தின் எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது தொல்பொருள் ஆராய்ச்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விண்வெளியில் இதுவரை கண்டுபிடிச்சதுலயே இதுதான் பெருசு.. நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல்..
- ஆத்தாடி.. வலையில் சிக்கிய டிராகன்.. அதிர்ந்துபோன மீனவர்.. வைரலாகும் புகைப்படம்..!
- "கடல் அரக்கன் அது".. திமிங்கிலங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ராட்சத உயிரினம்.. மிரண்டுபோன ஆராய்ச்சியாளர்கள்..!
- அடேங்கப்பா.. 300 வருசம் பழமையான 'மம்மி'.. "பாக்க கடல் கன்னி மாதிரியே இருக்கு.." ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி தகவல்
- நீங்க இப்படி கூடு கட்டினா.. பறவைகள் வந்து அதுல வாழுமா? கேலி பேசியவர்களின் வாயை அடைக்க வைத்த பறவைக் காதலன்
- மேஜைக்கு அடியில வச்சு.. கைதிக்கு 'லிப்லாக்' கிஸ் கொடுத்த பெண் நீதிபதி! வெளிவந்துள்ள சிசிடிவி காட்சிகள்!
- பிங்க் கலராக மாறிய ஏரி...! 'அய்யோ... நாற்றம் குடல புரட்டுது...' ஏன் 'இப்படி' ஆச்சுன்னா...? - தெரிய வந்துள்ள 'அதிர' வைக்கும் உண்மை...!
- கூகுளுக்கே அல்வா கொடுத்த வெப் டிசைனர்...! 'சரி அப்படி என்ன தான் ஆகுதுன்னு சும்மா ட்ரை பண்ணி பாப்போம்...' - பதறிப் போன கூகுள்...!
- 140 மில்லியன் வருசத்துக்கு முன்னாடியே வாழ்ந்த ஒரு உயிரினம்.. ஆராய்ச்சியாளர்களை மிரள வைத்த புதைப்படிவம்..!
- "இது வருஷக் கணக்கா போராடின பெண்களுக்கு கிடைச்ச வரலாற்று வெற்றி!".. கட்டிப்பிடித்து அழுது.. சாலையில் திரண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திய பெண்கள்!