இன்னொரு கேலக்சியிலிருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்.. "இதோட 2வது டைம்".. அனுப்புறது யாரு? குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளியிலிருந்து வினோதமான ரேடியோ சிக்னல்கள் பூமிக்கு வந்திருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளியில் இருந்து சில மில்லி வினாடிகள் மட்டுமே நீடிக்கக்கூடிய fast radio bursts எனப்படும் ரேடியோ சிக்னல் பூமியில் பதிவாகியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். எங்கிருந்து இந்த சிக்னல் தோன்றியது? இதனை அனுப்பியது யார்? என்ற கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கும் பணியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
இரண்டாவது முறை
இந்த சிக்னல்கள் 3000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் கேலக்சியில் இருந்து வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள். இவை சில மில்லி வினாடிகளே நீடித்தாலும் பலமான ரேடியோ அலைகளை இவை கொண்டிருப்பதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், இரண்டாவது முறையாக இதுபோன்ற சிக்னல் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, மாணவர் டேவிட் நர்கெவிக் மற்றும் அவரது மேற்பார்வையாளர் டங்கன் லோரிமர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் மூலம் இந்த சிக்னலை முதன்முறையாக கண்டுபிடித்தனர்.
புது சிக்னல்
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரேடியோ அலைக்கு FRBs 20190520B எனப் பெயரிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். மே 20, 2019 அன்று சீனாவின் குய்சோவில் உள்ள ரேடியோ தொலைநோக்கியைப் (FAST) பயன்படுத்தி இந்த சிக்கனல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 2020 மற்றும் செப்டம்பர் 2020 க்கு இடைப்பட்ட காலத்தில் இதுபோல 75 FRBs பதிவாகியுள்ளன.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ரேடியோ அலைகள், நிலையான வானொலி மூலத்திலிருந்து வருகிறது என்றும் அங்குள்ள dwarf கேலக்சி ஒன்றுக்கு அருகே அமைந்துள்ள விண்மீனுடன் இந்த சிக்னலுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பட்ட ஆராய்ச்சி தேவை
இந்த ரேடியோ அலைகள் உருவாகும் இடத்திற்கு அருகே, மற்றொரு இடத்திலிருந்தும் பலமில்லாத ரேடியோ சிக்னல்கள் உருவாவதாக கணித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுகுறித்து முழுமையான தகவல்களை பெற நீடித்த ஆய்வுகள் தேவை என்கின்றனர்.
மேலும், தற்போது கன்டுபிடிக்கப்பட்டுள்ள FRBs 20190520B "புதிதாகப் பிறந்ததாக இருக்கலாம்" என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது, நியூட்ரான் நட்சத்திரத்தை வெளியிட்ட சூப்பர்நோவா வெடிப்பால் வெளியேற்றப்பட்ட அடர்த்தியான பொருட்களால் இந்த ரேடியோ அலைகள் இன்னும் சூழப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மனித உடலுக்குத் தேவையான முக்கிய பொருட்கள் அங்க இருக்கு".. ஆராய்ச்சியாளர்களை திகைக்க வச்ச சிறுகோள்.. வரலாற்றிலேயே முதல் முறையாம்..!
- இறக்கை மட்டுமே 30 அடி.. "உலகத்தின் முதல் பறவை அதுதானா?".. ஆய்வாளர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
- விண்வெளிக்கு நிர்வாணப் படங்களை அனுப்பும் நாசா? எதற்காக தெரியுமா? – சுவாரஸ்ய பின்னணி!
- நாசா பகிர்ந்த ஃபோட்டோ.. "இது.. அதோட கால்தடம் மாதிரியே இருக்கே.." அரண்டு போன நெட்டிசன்கள்
- விண்வெளியில் இதுவரை கண்டுபிடிச்சதுலயே இதுதான் பெருசு.. நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல்..
- வினாடிக்கு 575 கிலோமீட்டர் வேகம்.. பூமியை நெருங்கும் பிரம்மாண்ட சூரியப்புயல் - ஆய்வாளர்கள் வெளியிட்ட பகீர் தகவல்..!
- 10 நாள் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ள 3 தொழிலதிபர்கள்..கட்டணம் எவ்வளவு தெரியுமா?
- "கடல் அரக்கன் அது".. திமிங்கிலங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ராட்சத உயிரினம்.. மிரண்டுபோன ஆராய்ச்சியாளர்கள்..!
- அடேங்கப்பா.. 300 வருசம் பழமையான 'மம்மி'.. "பாக்க கடல் கன்னி மாதிரியே இருக்கு.." ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி தகவல்
- "500 டன் வெயிட்டு.. இந்தியா மேல விழுந்தா என்ன பண்ணுவீங்க..?" தூக்கிவாரிப் போட வைக்கும் ரஷ்யாவின் பரபரப்பு கேள்வி..!