ஆத்தாடி ஜஸ்ட் மிஸ்.. சர்க்கஸ் சாகசத்தின் போது பயங்கரம்.. நெஞ்சை பதற வைக்கும் காட்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனி: 20 அடி உயரத்தில் சாக நிகழ்ச்சியில் சர்க்கஸ் கலைஞர் ஒருவர் கீழே தவறி விழும் காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது.

Advertising
>
Advertising

ஊர் திருவிழா அல்லது நகரங்களில் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளை காண சிறுவர் முதல் பெரியவர்கள் கூட்டம் கூடி ரசிப்பார்கள். நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் நடத்தப்படும் சர்க்கஸ் சாகசங்கள் சில சமயங்களில் மறக்க முடியாத பயங்கர அனுபவங்களையும் தருவது உண்டு. பார்வையாளர்களின் மகிழ்ச்சிக்காக  உயிரை பணயம் வைத்து  சர்க்கஸ் கலைஞர்கள் சாகச நிகழ்ச்சியை நிகழ்த்துவார்கள்.

இந்நிலையில் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தையே உலுக்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஜெர்மனியின் டுயிஸ் பார்க் பகுதியில் உள்ள ப்ளிக் ப்ளேக் (FlicFlac) சர்க்கஸ் குழுவின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றன. அங்கு ஒரு பலகையில் இருந்து மற்றொரு பலகைக்கு திறமையான சர்க்கஸ் கலைஞரும், நன்கு பயிற்சி பெற்ற ஸ்கேட்டருமான லூகாஸ் மாலேவ்ஸ்கி தாவ முயன்றார்.

அப்போது அவருடைய ரோலர் பிளேடில் கோளாறு ஏற்பட்டு,  எதிர்முனையில் இருந்த உயரமான மேடையை பிடிக்க முடியாமல், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் 20 அடி உயரத்தில் இருந்து லூகாஸ் மாலேவ்ஸ்கி தவறி விழும் காட்சியைக் கண்ட சக ஊழியர்கள், அவரை விரைவாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஒத்த வார்த்தைய விட்டு 7 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லூகாஸ், ஆபத்தான காயங்கள் ஏதும் இல்லாமல் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மணிக்கட்டில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக சிகிச்சை லூகாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் மீண்டும் இதுபோன்று தாவ முயற்சித்து வருகிறேன்.  இதேபோன்று 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது, ஆண்கள் இருவர் தவறி விழும் காட்சி நெஞ்சை பதறவைத்தது.

விரட்டி வந்து மண்டையை கொத்தும் காகம்.. தலையில் துண்டுடன் வெளியே செல்லும் பொதுமக்கள்.. அதுக்கு அப்படி என்ன கோவம்?

லூகாஸ் காயங்களோடு உயிர் தப்பினாலும், நெட்டிசன்கள் அந்த நிகழ்வில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். லூகாஸ் 20 அடி உயரத்தில் இருந்து விழும் காட்சி சமூகவலைதளபக்கங்களில் வைரலாகி வருகின்றன.  முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம், ரஷ்யாவில் சர்க்கஸ் நேரலை நிகழ்ச்சியின் போது பயிற்சியாளர் ஒருவர் சர்க்கஸ் சிங்கத்தால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCENE OF A CIRCUS PERFORMER, FALLING TO 20 FEET, GERMANY, சர்க்கஸ் கலைஞர், ஜெர்மனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்