சோசியல் மீடியாவில் சர்ச்சை பதிவு.. பெண்ணுக்கு சவூதி நீதிமன்றம் விதித்த தண்டனை.. உலக அளவில் ஏற்பட்ட பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சவூதி அரேபியாவில் சமூக வலைதளங்களில் நாட்டுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இப்படி ஒரு திறமையா.?".. விநாயகர் சிலைகளை தத்ரூபமாக உருவாக்கும் சிறுவன்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!

சவூதி அரேபியா

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் சமீப காலங்களில் அரசுக்கு எதிராக பதிவுகளை வெளியிடும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுவாகவே கடுமையான சட்டங்களை கொண்டிருக்கும் நாடாக உலக அரங்கில் சவூதி அறியப்படுகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் மக்களை அந்நாட்டு அரசு கவனித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கடந்த சில வாரங்களில் இரண்டு பெண்களுக்கு பல வருட சிறைத்தண்டனைகளை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் நூரா பின்ட் சயீத் அல்-கஹ்தானி என்னும் பெண்மணிக்கு சவூதி நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது. "சமூக ஊடகங்கள் வழியாக நாட்டின் சமூகக் கட்டமைப்பை குலைக்க இணையத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பொது ஒழுங்கை மீறுதல்" ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்மீது வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும், அவரது சமூக வலைதள பதிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தொடரும் தண்டனைகள்

முன்னதாக சல்மா அல்-ஷெஹாப் என்னும் பிஎச்டி ஆய்வு மாணவிக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல 34 ஆண்டுகள் தடையும் விதித்திருந்தது சவூதி நீதிமன்றம். இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வை மேற்கொண்டு வந்தார் சல்மா. விடுமுறைக்காக சவூதி திரும்பிய அவர் பொது அமைதி, சிவில் மற்றும் தேசிய பாதுகாப்பை ட்விட்டர் மூலமாக சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவியதாக சல்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவருக்கு 3 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம், அவருக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன் மேலும் 34 ஆண்டுகள் அவர் வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் உள்ள மகளிர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆணையங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், மேலும் ஒரு பெண்ணுக்கு சவூதி நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | கடைசி தொடரில் களமிறங்கிய செரினா வில்லியம்ஸ்.. உலகமே அவரோட 'Shoe' பத்திதான் பேசிட்டு இருக்கு.. அப்படி என்ன ஸ்பெஷல் அதுல?

SAUDI WOMAN, JAIL, SOCIAL MEDIA POSTS, சவூதி அரேபியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்