30 வருஷமா Toilet-லயா சமோசா ரெடி பண்ணீங்க?. ஹோட்டலில் நடந்த திடீர் ரெய்டு.. ஆடிப்போன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சவூதி அரேபியாவில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 வருடங்களாக கழிப்பறையில் சமோசா தயார் செய்யப்பட்டது அதிகாரிகள் நடத்திய திடீர் ரெய்டில் தெரியவந்திருக்கிறது.

Advertising
>
Advertising

சவூதி அரேபியா நாட்டில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் செயல்பட்டு வந்த உணவகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் திடீர் பரிசோதனையில் ஈடுபட்டனர். கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும், சவூதி சட்ட விதிமுறைகளை இந்த ஹோட்டல் நிர்வாகம் மீறியதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது.

திடீர் ஆய்வு

இதனையடுத்து ஜித்தா முனிசிபாலிட்டி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளனர். அப்போது அந்த உணவகத்தில் இருந்த பொருட்கள் மற்றும் உணவு தயாரிக்கும் இடங்களை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த உணவகத்தின் கழிவறையில் சமோசா உள்ளிட்ட ஸ்னாக்ஸ் மற்றும் மத்திய உணவுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், இந்த உணவகத்தில் இருந்த இறைச்சி, சீஸ் ஆகியவை காலாவதியாகி 2 வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சீல்

தரமற்ற முறையில் உணவு பொருட்களை பயன்படுத்தியது மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயார் செய்த குற்றத்தின் அடிப்படையில் அந்த உணவகத்திற்கு ஜித்தா முனிசிபாலிட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் இருந்த ஷவர்மா கடைக்கும் முனிசிபாலிட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த உணவகத்தின் ஷவர்மா தயாரிக்கும் இடத்தில் எலி ஒன்று இருந்ததை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் முனிசிபாலிட்டிக்கு தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 30 வருடங்களாக கழிவறையில் வைத்து சமோசா உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரித்து வந்த உணவகத்திற்கு ஜித்தா முனிசிபாலிட்டி அதிகாரிகள் சீல் வைத்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

 

SAMOSA, SAUDI, FOOD, சவூதி, சம்சா, உணவகம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்