சவூதி இளவரசருக்கு சொந்தமான உலகின் காஸ்ட்லியான வீடு... பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்.. விலையை கேட்டா தான் பகீர்னு இருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் அங்குள்ள தனது மாளிகையில் தங்கியுள்ளார். இன்றைய தேதியில் இதுதான் உலகத்தின் விலையுயர்ந்த வீடாகும்.

Advertising
>
Advertising

Also Read | மனைவியின் தங்கச்சி மீது காதல்.. வசிய மருந்தோட வீட்டுக்கு போன கணவன்.. அலேக்காக தூக்கிய போலீஸ்..திடுக்கிட்ட திருப்பத்தூர்..!

சவூதி இளவரசர்

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த 2015 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தற்போது சவூதியின் துணை பிரதமராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவருடைய அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே அவ்வப்போது அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்துவது உண்டு. சமீபத்தில் இவர் 75 மைல் நீளத்தில் பிரம்மாண்ட கட்டிடத்தை எழுப்ப இருப்பதாக அறிவித்து உலக நாடுகளை திகைக்க வைத்தார்.

இந்நிலையில், அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள சல்மான் அங்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்தார். இருப்பினும் இந்த சந்திப்பில் எதுபற்றி விவாதிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனிடையே சல்மான் தங்கியிருந்த மாளிகை பற்றி இப்போது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உலகின் விலையுயர்ந்த வீடு

பிரான்ஸ் நாட்டின் சொகுசு வீடு கட்டுமான நிறுவனமான Cogemad இந்த வீட்டினை கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டியது. 17 ஆம் நூற்றாண்டு கட்டுமானக் கலையை வெளிப்படுத்தும் விதமாக இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. இதனுள் 10 பெட்ரூம்கள் இருக்கின்றன. அதுமட்டும்  அல்லாமல், பிரம்மாண்ட நூலகம், தங்க முலாம் பூசப்பட்ட நீரூற்று, சினிமா தியேட்டர் என பார்த்து பார்த்து கட்டப்பட்டுள்ளது இந்த வீடு.

இதனை கடந்த 2015 ஆம் ஆண்டு 301 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 2,300 கோடி) வாங்கினார் சவூதி இளவரசரான முகமது பின் சல்மான். இதுவரையில் இவ்வளவு பெரிய தொகைக்கு உலகின் எந்த வீடும் விற்பனை செய்யப்பட்டதில்லை. அதன் காரணமாகவே இதனை உலகின் மிக விலையுயர்ந்த வீடு என்று அழைக்கிறார்கள்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முகமது பின் சல்மான் நேற்று இரவு இந்த வீட்டில் தங்கியுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளால் குவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்த வீடு குறித்து இணையதளங்களில் நெட்டிசன்கள் வைரலாக பேசிவருகின்றனர்.

Also Read | Berth ல லக்கேஜை வைக்கும்போது திடுக்கிட்ட பயணி.. கொஞ்ச நேரத்துல களேபரமாண ரயில்.. அடுத்த ஸ்டேஷன்லேயே மொத்த பேரையும் கீழ இறக்கிய அதிகாரிகள்....!

SAUDI, SAUDI PRINCE, EXPENSIVE HOME, WORLD MOST EXPENSIVE HOME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்