அபுதாபியில் நடந்த டிரோன் தாக்குதல்.. உடனே திருப்பி அடிக்கணும்... ஒரு சில மணி நேரங்களில் சவுதி கூட்டுப்படைகள் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் மோதல் நடந்து வருகிறது.

Advertising
>
Advertising

மேலும், இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கின்றது. அதேப்போன்று ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடக்கம். இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் மோதல் நடந்து வருகிறது.

அதிரடியாக நடந்த டிரோன் தாக்குதல்:

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அண்டொக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிரடியாக டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் உலகமெங்கிலும் அதிர்வலைகளை உருவாக்கியது.

வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்குகள்:

இதில், எண்ணெய் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டேங்குகள் மழமழவென எரிந்து வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் என மொத்தமாக 3 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழப்பு எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் தாக்குதல்:

இந்த நிலையில், அபுதாபியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளன.  அபுதாபியில் தாக்குதல் நடத்து சில மணி நேரங்களில் இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஏமனில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சென்ற ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றை  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றுள்ளனர். அந்த சரக்கு கப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 11 மாலுமிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.  ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பிடித்துவைக்கப்பட்டுள்ள இந்தியர்களை தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..

டிரோன், SAUDI, HOUTHI, REBELS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்