1665 இந்தியர்கள் உட்பட... 2000 ஊழியர்களை 'மொத்தமாக'... 'திருப்பி' அனுப்பிய நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனியார் நிறுவனம் ஒன்று 2000 ஊழியர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

Advertising
Advertising

கொரோனாவால் உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை திருப்பி அனுப்பி வருகின்றன. அந்த வகையில் சவுதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எக்ஸ்பர்டைஸ் என்னும் மிகப்பெரிய காண்டிராக்ட் நிறுவனம், கொரோனா அச்சம் மற்றும் பல்வேறு நிலைகளை கருத்தில் கொண்டு சுமார் 2000 ஊழியர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

இவர்கள் அனைவரையும் தங்களது சொந்த செலவில் சார்ட்டர்ட் விமானங்களின் மூலம் அவரவரின் சொந்த நாடுகளுக்கு அந்நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

இதன்மூலம், மேற்கு ஆசியாவில் அதிகளவில் தங்களது தொழிலாளர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பிய உலகின் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை எக்ஸ்பர்டைஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் ஹெவிமெட்டல்ஸ் துறையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் இந்நிறுவனத்தில் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 10,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்